அமைவிடம் :
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 149 வது தேவாரத்தலம் ஆகும். கோயிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, கன்னி விநாயகர், சுப்பிரமணியர் ஆகிய சுதை உருவங்கள் உள்ளன.
மாவட்டம் :
அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல், கேக்கரை, திருவாரூர் மாவட்டம்.
எப்படி செல்வது?
திருவாரூரிலிருந்து கடைத்தெரு வழியாகக் கேக்கரை வரை பேருந்து செல்லும். திருவிற்குடி என்கிற சிவஸ்தலம் இங்கிருந்து சிறிது தொலைவில் இருக்கிறது. திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் சென்று அங்கிருந்து ஆட்டோவில் கோயிலுக்கு செல்லலாம்.
கோவில் சிறப்பு :
இத்தலத்தில் தபோவதனி என்னும் அரசி குழந்தை பாக்கியம் வேண்டி இத்தலத்து அஞ்சனாட்சி அம்மனை வழிபாடு செய்தாள். இவளது வேண்டுதலை ஏற்ற அம்மன் தாமரை மலரில் அழகிய குழந்தையாக தோன்றினாள். அப்பெண் மணப்பருவம் வந்தபோது இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்தார் என கூறப்படுகிறது.
இங்குள்ள குளத்தின் உள்ளே 16 கிணறுகள் உள்ளன. இதில் நீராடினால் மகாமக தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.
ராமர் தசரத சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று. முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன் கிடைக்கும் என்பதால் இத்தலம் 'கேக்கரை" என்றும் அழைக்கப்படுகிறது.
மாசி மாதத்தில் சிவராத்திரி நாளில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுவது இத்தலத்தின் சிறப்பம்சம்.
கோவில் திருவிழா :
தை, ஆடி, மகாளய அமாவாசை, சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
பிரார்த்தனை :
12 அமாவாசை இத்தல குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன் :
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். கோயில்களில் நிரந்தரமாக தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி கொடுக்கின்றனர்
அருள்தரும் ஆலயங்கள்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக