Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 19 மே, 2021

வாழ்க்கையை எளிதாக வாழ... சின்ன சின்ன டிப்ஸ்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிப்பதற்கு மட்டுமே...!!
-------------------------------------
ஒரு டாக்டர், தன் கிளினிக் டாய்லெட் குழாய் ரிப்பேருக்காக ஒரு பிளம்பரை அழைத்தாராம். அவனும் பத்து நிமிடத்தில் ஒரு சில வாஷர்களை மாற்றிவிட்டு, சிலதை டைட் செய்து விட்டு ரூ.1000 கேட்டதும் டாக்டர் அதிர்ந்து போனாராம்.
டாக்டர் : நான் எம்.பி.பி.ஸ் படிச்ச டாக்டர்... என்னாலேயே பத்து நிமிடத்துல 1000 ரூபாய் சம்பாதிக்க முடியாது...
பிளம்பர் சொன்னார் : நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் டாக்டர்... நான் டாக்டரா இருந்தபோதும் என்னாலயும் அவ்வளவு சம்பாதிக்க முடியலை... அதனாலதான் தொழில மாத்திட்டேன்.
டாக்டர் : 😯😯
-------------------------------------
மன முதிர்ச்சி என்றால் என்ன?
-------------------------------------
👉 மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது.

👉 அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.

👉 மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

👉 எதை விட வேண்டுமோ... அதை விட பழகிக்கொள்ளுதல்.

👉 மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

👉 செய்வதை மன அமைதியுடன் செய்வது.

👉 நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.

👉 நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.

👉 மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

👉 எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்.

👉 நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவதற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

👉 சந்தோஷம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

இந்த 12-ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக