சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கீபோர்ட் ட்ரியோ 500
இந்நிலையில் ஸ்மார்ட்போன்களுக்கு பயன்படும் வகையில் கீபோர்டு அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் வரும் ஜூன் மாதம் சாம்சங் நிறுவனத்தின் புதிய கீபோர்டு விற்பனைக்கு வரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் கீபோர்ட் ட்ரியோ 500 மாடலின் விலை 45 யூரோக்கள் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
ட்ரியோ 500 கீபோர்ட்
சாம்சங் நிறுவனத்தின் ட்ரியோ 500 கீபோர்ட் மாடலை ஒரே சமயத்தில் பல்வேறு சாதனங்களுடன் இணைக்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு இதை ப்ளூடூத் மூலம் மூன்று வெவ்வேறு சாதனங்களுடன் இணைக்க முடியும். அதேசமயம் எளிமையாக ஒவ்வொரு சாதனத்துடன் மாற்றி பயன்படுத்தலாம்.
பின்பு இந்த சாம்சங் டிராவல் கீபோர்டு ஆனது பல்வேறு ஷார்ட்கட் வசதிகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ட்ரியோ 500 கேலக்ஸி
இந்த சாம்சங் கீபோர்டு ட்ரியோ 500 கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட் சாதனங்களுடன் டெக்ஸ் மோடில் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த சாதனத்தை லேப்டாப் உடன் இணைக்க முடியும் என்று கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக