இப்போது வரும் புதிய புதிய லேப்டாப் மாடல்கள் அசலத்தான மென்பொருள் வசதி, தனித்துவமான டிஸ்பிளே என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளன என்று தான் கூறவேண்டும். குறிப்பாக ஒரு சில நிறுவனங்கள் அதிநவீன லேப்டாப் மாடல்களை நாம் எதிர்பார்க்கும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்கின்றன.
காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப்
இந்நிலையில் அவிட்டா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. குறிப்பாக
இந்த லேப்டாப் மாடல் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, தனித்துவமான மென்பொருள் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பட்ஜெட் விலையில்
வெளிவந்துள்ளது.
1920×1080 பிக்சல் தீர்மானம்
புதிய காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப் மாடல் ஆனது FHD IPS மல்டி-டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1920×1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல்.
இதுதவிர அவிட்டா காஸ்மோஸ் 2 இன் 1 மாடல் என்பதால் இதனை டேப்லெட் போன்றும் பயன்படுத்த முடியும். மேலும் இது கழற்றக்கூடிய வசதி கொண்ட கீபோர்டு, பிலட்-இன் ஸ்டான்டு கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
UHD 600 Graphics ஆதரவு
இந்த காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப் மாடலில் மிகவும் எதிர்பார்த்த இன்டெல் செலரான் N4000 டூயல் கோர் பிராசஸர் இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு UHD 600 Graphics ஆதரவு மற்றும் விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல்.
மேலும் காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப் மாடலில் 4 ஜிபி DDR4 ரேம் வசதி மற்றும் 64 ஜிபி eMMC மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது. இதுதவிர மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியும் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய லேப்டாப் மாடலில் 2எம்பி பிரைமரி மற்றும் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் மினி எச்டிஎம்ஐ போர்ட், ப்ளூடூத் 4.0, வைஃபை, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப் மாடல்.
காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப் மாடல் ஆனது அதிகபட்சம் 6 மணி நேர பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சார்கோல் கிரே நிறத்தில் கிடைக்கிறது இந்த புத்தம் புதிய சாதனம்.
அவிட்டா காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப் மாடலின் விலை ரூ.17,990-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக