Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 19 மே, 2021

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்க வேண்டும் – குஷ்பூ


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் மக்களை தடுப்பூசி போடும்மாறும் அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்தப் பதவியில், ‘தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற விதியை அரசு கொண்டுவர வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுவிட்டு வந்த பிறகுதான் அவர்களுக்கு உரிய ரேஷன் பொருட்களை கொடுக்க வேண்டும் என்ற முறையை செயப்படுத்தினால் தான், அனைவரும் தடுப்பூசி போடுவார்கள். என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக