Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 24 மே, 2021

புதிய பெயரில் வரும் பப்ஜி-ஐ தடை பண்ணுங்க.. பிரதமர் மோடிக்கு கடிதம்..!

பல தடைகளைத் தாண்டி, குட்டிக்கரணம் எல்லாம் ஆடிச்சி இப்போ தான் பப்ஜி கேம்-ஐ தயாரித்த தென் கொரிய நிறுவனமான KRAFTON சீன நிறுவனமான டென்சென்ட் உடனான ஒப்பந்தம் எல்லாம் சரிக்கட்டி இந்தியாவில் புதிய பெயரில் பப்ஜி மேம்-ஐ வருகிற ஜூன் 16ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகத் திட்டமிட்டு உள்ளது. 

இந்திய அரசு 200க்கும் அதிகமாகச் சீன செயலிகளைத் தடை செய்த போது அதில் பப்ஜி கேம்-ம் தடை செய்யப்பட்டது. கிட்டதட்ட 9 மாதங்களுக்குப் பின் இந்தியாவில் மீண்டும் பல மாற்றங்கள் அறிமுகம் செய்து பப்ஜி கேமிங் செயலியை பேட்டில்கிவுன்ட் மொபைல் இந்தியா என்ற பெயரில் வெளியிடுவதாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில் பேட்டில்கிவுன்ட் மொபைல் இந்தியா செயலிக்குத் தடை விதிக்க எம்எல்ஏ ஒருவர் பிரதமர் மோடிக்கு நேரடியாகக் கடிதம் அனுப்பியுள்ளார். 

அருணாச்சல பிரதேசம் எம்எல்ஏ

 அருணாச்சல பிரதேசத்தின் எம்எல்ஏ-வான Ninong Ering இந்தியாவில் மீண்டும் பேட்டில்கிவுன்ட் மொபைல் இந்தியா பெயரில் வரும் பப்ஜி கேம் செயலியை தடை செய்ய வேண்டும் எனப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

பப்ஜி இந்தியா பேட்டில்கிவுன்ட் மொபைல் இந்தியா செயலி இதுமட்டும் அல்லாமல் பேட்டில்கிவுன்ட் மொபைல் இந்தியா செயலியின் புதிய அவதார் இந்திய அரசையும், இந்திய மக்களையும் கிண்டல் செய்யும் வகையில் ரெக்கான் மாஸ் மற்றும் சூட் அறிமுகம் செய்துள்ளதாக இந்தக் கடிதத்தில் Ninong Ering தெரிவித்துள்ளார். 

தென் கொரிய நிறுவனம் KRAFTON

 இதோடு KRAFTON தென் கொரிய நிறுவனமாக இருந்தாலும், KRAFTON இந்தியா அலுவலகத்தில் டென்சென்ட் நிறுவனத்தின் பல ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும். கூகிள் ப்ளே-வில் இருக்கும் பேட்டில்கிவுன்ட் மொபைல் இந்தியா-வின் PUBG Mobile பெயர் இடம் பெற்றுள்ளது.

 சீனாவின் டென்சென்ட் 

மேலும் சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் சிங்வி பேட்டில்கிவுன்ட் மொபைல் இந்தியா செயலி இந்திய மக்களின் பயன்பாட்டு வருவதன் மூலம் சீனாவின் டென்சென்ட் மீண்டும் இந்திய சந்தைக்குள் நுழைகிறது எனவும் தெரிவித்துள்ளார். 

 எப்போது அறிமுகம்? 

ஜூன் 16ஆம் தேதி பேட்டில்கிவுன்ட் மொபைல் இந்தியா செயலி அறிமுகம் செயல்படுகிறது எனக் கூறப்பட்டாலும் KRAFTON இந்தியா அறிமுகம் செய்யப்படும் நாள்-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!