>>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 4 மே, 2021

    மகிழ்ச்சி நீடித்திருக்க இதை முயற்சி செய்யுங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    ---------------------------------------------------------------

    கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!

    ---------------------------------------------------------------

    நோயாளி : உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சனையா டாக்டர்?

    டாக்டர் : ஆமா.. ஏன் கேட்கிறீங்க? 

    நோயாளி : என்னோட சொத்தப் பல்லை எடுக்கச் சொன்னா, நைஸா தங்கப் பல்லை எடுத்துட்டீங்களே!

    டாக்டர் : 😜😜

    ---------------------------------------------------------------

    மாலா : டாக்டரும், பேஷண்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்?

    சீலா : ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம்!

    மாலா : 😂😂

    ---------------------------------------------------------------

    சிறந்த வரிகள்...!!

    ---------------------------------------------------------------

    வாழ்க்கை தேடலில் தொலைக்க கூடாத மிகப் பெரிய புதையல் 'மன அமைதி" ஆகும். 

    உங்கள் மனம் உங்களை மீறி காயங்களை சுமக்கிறது என்றால் நீங்கள் உங்கள் வசம் இல்லை என்பது தெளிவாக தெரிய வரும். 

    மன நோய் என்பது மனதால் வருவதில்லை. சில மனிதர்களால் தான் வருகிறது. 

    மற்றவர் மனதை உடைக்கும் போது அவர்கள் நினைப்பதில்லை, நாளை நம் மனதையும் இருமடங்கு உடைக்க யாராவது வருவார்கள் என்று. 

    மகிழ்ச்சி நீடித்திருக்க மனநிலையை ஒரு நிலையில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். 

    மகிழ்ச்சியான வாழ்வின் திறவுகோல், நம் மனதை எவ்வாறு கையாளுகிறோம் என்பதைப் பொறுத்தது. இதற்கு ஆன்மிகப் பயிற்சிகளில் தவறாமல் ஈடுபட்டால் அதுவே மன நிம்மதிக்கான வழியாகும்.

    ---------------------------------------------------------------

    விடுகதைகள்...!!

    ---------------------------------------------------------------

    1. நடைக்கு உவமை, நளனுக்கு தூதுவன். அவன் யார்?

    2. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும், மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன?

    3. தணித்து உண்ணமுடியாது என்றாலும் இதை சேர்த்தால்தான் உணவுக்கு சுவை. அது என்ன? 

    4. தண்ணீர் இல்லாமல் வளரும், தரை இல்லாமல் படரும். அது என்ன? 

    5. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது. அது என்ன? 

    ---------------------------------------------------------------

    விடை :

    ---------------------------------------------------------------

    1. அன்னம் 

    2. தேனீ

    3. உப்பு 

    4. உரோமம் 

    5. சங்கு 

    ---------------------------------------------------------------

    தமிழ் அகராதி...!

    ---------------------------------------------------------------

    அபிப்ராயம் - கருத்து, ஏடல்

    அபிமானம் - நல்லெண்ணம்

    அபிவிருத்தி - மிகுவளர்ச்சி

    அபூர்வம் - அருமை

    அப்பியாசம் - பயிற்சி

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக