
பிளிப்கார்ட் தளத்தில் Big Saving Days sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு
விற்பனை ஆனது வரும் மே 7-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த சிறப்பு விற்பனையில் கூகுள் பிக்சல் 4ஏ சாதனத்தை குறைந்த விலையில் வாங்க முடியும்.
கூகுள் பிக்சல் 4ஏ
அதாவது கூகுள் பிக்சல் 4ஏ சாதனத்திற்கு 5000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்த சாதனத்தை ரூ.26,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் குறிப்பிட்ட சில சலுகைகளும் உடனே கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பு அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 10 ஓஸ் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 அப்டேட்
மேம்படுத்தக்கூடிய அம்சமும் உள்ளது. இதன் டிஸ்ப்ளே குறித்து பார்க்கையில் 5.8 இன்ச் அளவு, முழு ஹெச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
ஸ்னாப்டிராகன் 730 எஸ்ஓசி
2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்தஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி இருக்கிறது.
12 எம்பி பின்புற கேமரா
கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் கேமரா அம்சம் குறித்து பார்க்கையில், இதில் 12 எம்பி பின்புற கேமரா எஃப்1.7 லென்ஸ் உடன் வருகிறது. செல்பி கேமராவிற்கென முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், 4ஜி வோல்ட் இ, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட விருப்பங்களை கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 4ஏ. அதோடு போர்ட்ரெய்ட் லைட் அம்சமும், எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் பயன்முறையும் இதில் உள்ளது. இதன் பேட்டரி ஆயுள் 48 மணி நேரம் வரை நீடிக்கும்.
கூகுள் பிக்சல் 4a சிறப்பம்சங்கள்
5.8 இன்ச் முழு எச்.டி பிளஸ் கொண்ட 1080 X 2340 பிக்சல்கள் உடைய ஓல்இடி டிஸ்பிளே
எச்டிஆர் ஆதரவுடன்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G சிப்செட்
6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் 128 ஸ்டோரேஜ்
அண்ட்ராய்டு 10 இயங்குதளம்
12MP பின்புற கேமரா மற்றும் எல்.ஈ.டி ஃப்ளாஷ்
8MP முன்பாக செல்ஃபி கேமரா
3.5 மிமீ ஆடியோ ஜாக்
18W ஃபாஸ்ட் சார்ஜிங்
3140 எம்ஏஎச் பேட்டரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக