Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 20 மே, 2021

நடு இரவில் செல்போனில் வந்த சத்தம்... படித்ததில் சிரித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
-------------------------------------
அமலா : இன்னிக்கு நம்ம டாக்டர் நாலு உயிர்களை காப்பாத்திட்டார்...!
விமலா : அப்படியா...! எப்படி?
அமலா : இன்னிக்கு நடக்க இருந்த 4 ஆபரேஷனையும் தள்ளி வெச்சிட்டார்...!
விமலா : 😅😅
-------------------------------------
நோயாளி : டாக்டர் மூச்சுவிட்டால் நெஞ்சு வலிக்கிது.
டாக்டர் : ஒரே மாத்திரையில் இரண்டையும் நிறுத்திடுறேன். கவலைப்படாதீங்க.
நோயாளி : 😲😲
-------------------------------------
படித்ததில் சிரித்தது!
-------------------------------------
ஒரு நடு இரவில் தன் மனைவியின் செல்போனில் 'பீப்" சத்தம் கேட்டது. கணவர் எழுந்து, அந்த போனைப் பார்த்து விட்டு, தன் மனைவியிடம் கோபமாக 'யார் இது? இந்த நேரத்தில் உன்னை பியூட்டிஃபுல்-ன்னு சொல்லுறது?" என்று கத்தினார்.

மனைவி, 'அட.. யாருடா அது.. நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்லுறாங்களே.. அது யாருன்னு பார்ப்போம்.." என்று ரொம்ப சந்தோஷமா எழுந்து வந்து தன் கைபோனைப் பார்த்தாள்.

உடனே கோபத்துடன் அவரைவிட சத்தமாகக் கத்தினாள்.. அட லூசு புருஷா.. மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டு பாரு.. இது பியூட்டிஃபுல் இல்லை.. பேட்டரிஃபுல் என்று.😛😛
-------------------------------------
இந்த புதிருக்கு பதில் தெரியுமா?
-------------------------------------
1. இருவரிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆப்பிள்கள் உள்ளன. முதலாமவரிடம் உள்ள ஆப்பிள்களில் ஒன்றை இரண்டாமவரிடம் கொடுத்தால், இரண்டாமவரிடம் முதலாமவரின் இரு மடங்கு ஆப்பிள்கள் இருக்கும். இரண்டாமவர் ஆப்பிள்களில் ஒன்றை முதலாமவரிடம் கொடுத்தால் இரண்டாமவரிடமும் சமமான ஆப்பிள்கள் இருக்கும். எனில் முதலாமவரிடம் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன? இரண்டாமவரிடம் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன?

2. ஒரு மேசையில் 15 ஆப்பிள்கள் உள்ளன. நான் 6 ஆப்பிள்களும், நீங்கள் 4 ஆப்பிள்களும் எடுத்தால் உங்களிடம் மொத்தம் எத்தனை ஆப்பிள்கள் இருக்கும்?

விடை :

1. முதலாமவரிடம் 1 ஆப்பிளும், இரண்டாமவரிடம் 3 ஆப்பிள்களும் இருக்கும்.

2. 4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!