Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 17 மே, 2021

ஜியோ அதிரடிச்சலுகை...கொரோனா முடியும் வரை இனி ரிசார்ஜ் செய்யாமலே பேசலாம்..!



பெருந்தொற்று காலம் முழுதும் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் இரண்டு அட்டகாசமான சலுகைகளை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

பெருந்தொற்று காலம் முழுதும் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் இரண்டு அட்டகாசமான சலுகைகளை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இதற்காக பெருந்தொற்று காலம் முழுதுக்குமான இரண்டு பிரத்யேக திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது. அதில், 1. ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்திருக்கும் ஜியோ, இந்த பெருந்தொற்று காலம் முழுவதும், ரீசார்ஜ் செய்ய இயலாத நிலையில் இருக்கும் ஜியோபோன் வாடிக்கையார்களுக்கு தினமும் 10 நிமிடங்கள் என்ற அடிப்படையில் மாதம் ஒன்றிற்கு 300 இலவச நிமிடங்களை தருகிறது.

2. அதே போல ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்தையும் வாங்கும் போது அதே மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை இலவசமாக வழங்கப்படும். அதாவது 75 ரூபாய்க்கு ஜியோபோன் வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்தால், அவருக்கு கூடுதலாக 75 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படும்.
 
இந்த சவாலான காலகட்டத்தில் ஒவ்வொரு இந்தியனுடனும் துணை நிற்க ரிலையன்ஸ் உறுதிபூண்டுள்ளது, மற்றும் சக குடிமக்கள் சிரமங்களை சமாளித்து சகஜ நிலைக்கு திரும்ப எல்லா முயற்சிகளையும் நாங்கள் எங்களால் ஆன முயற்சிகளை எடுப்போம் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக