Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 17 மே, 2021

ப்ளீஸ்... அக்காவையும் சேர்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க.! திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளையிடம் கெஞ்சிய தங்கை.! நெகிழ்ச்சி சம்பவம்.!

 


கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் பகுதியை சேர்ந்தவர் சுப்ரியா. இவர் வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி ஆவார். இவருக்கு லலிதா என்ற தங்கை உள்ளார். இந்நிலையில், சுப்ரியா மாற்றுத்திறனாளி என்பதால், அவரை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. இந்தநிலையில் சுப்ரியாவின் தங்கை லலிதாவுக்கும், உமாபதி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதனையடுத்து இவர்களின் திருமணம் நேற்று நடக்க இருந்தது. அப்போது லலிதா, எனது அக்கா மாற்று திறனாளி என்பதால் யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. இதனால் நீங்களே என்னையும், எனது அக்காவையும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். ஆனால் உமாபதி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் உறுதியாக இருந்த லலிதா, எனது அக்காவையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டால் தான் உங்களை திருமணம் செய்வேன் என்று உமாபதியிடம் கூறியுள்ளார்.

இந்தநிலையில் லலிதா மீது கொண்ட காதலால், இதற்கு சம்மதம் தெரிவித்த உமாபதி, தனது குடும்பத்தினரிடமும் பேசி சுப்ரியா, லலிதாவை திருமணம் செய்ய சம்மதம் வாங்கி இருந்தார். அதன் பின் நேற்று ஒரே மேடையில் உமாபதி, சுப்ரியா மற்றும் லலிதாவுக்கு திருமணம் நடந்தது. இவர்களின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!