எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 2720 வி பிளிப் போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்
நோக்கியா 2720 வி பிளிப்
புதிய நோக்கியா 2720 வி பிளிப் போன் மாடல் ஆனது 4ஜி வசதியை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் KaiOS மூலம் இயங்குகிறது இந்த புதிய சாதனம். அமெரிக்காவில் வெரிசோனின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் இன்-ஸ்டோர் மூலம் மே 20 முதல் விற்பனைக்கு வருகிறது இந்த நோக்கியா 2720 வி பிளிப் போன் மாடல் மாடல். இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப்பார்ப்போம்
நோக்கியா 2720 வி பிளிப் சாதனம் ஆனது 2.8-இன்ச் QVGA டிஸ்பிளே உடன் 240×320 பிக்சல்கள் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வெளிப்புறத்தில் 240 × 240 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 1.3-இன்ச் டிஸ்பிளே வசதியும் உள்ளது. எனவே பயன்படுத்தவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த புதிய நோக்கியா 2720 வி பிளிப் சாதனத்தில் 1.1ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் குவால்காம் 205 (MSM8905) சிப்செட் உடன் அட்ரினோ 304 ஜிபியு வசதியும் உள்ளது. மேலும் KaiOS இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
512எம்பி ரேம்
நோக்கியா 2720 வி பிளிப் மாடலில் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
1500 எம்ஏஎச் பேட்டரி
நோக்கியா 2720 வி பிளிப் மாடலில் 1500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 2எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மொபைல் போன். மேலும் நோக்கியா 2720 வி பிளிப் மாடலில் கூகுள் அசிஸ்டெண்ட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற பிற ஆப் பயன்பாடுகளை ஆதரிக்கிறது இந்த நோக்கியா 2720 வி பிளிப் மாடல். இதுதவிர 4ஜி வோல்ட்இ, வைஃபை ஹாட்ஸ்பாட் கொண்ட Wi-Fi 802.11 b / g / n ஆதரவு,புளூடூத் 4.1 எல்இ, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.
நோக்கியா 2720 வி பிளிப் மாடலின் விலை 79.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.5875-ஆக உள்ளது. குறிப்பாக கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது நோக்கியா 2720 வி பிளிப் மாடல்.
.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக