Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 மே, 2021

தொலைந்தது ஆடா? நாயா?... கரெக்டா நிறுத்தாம சொல்லுங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

-----------------------------------------------------

போலீஸ் : நீ எங்க தங்கியிருக்க?

பையன் : எங்க அப்பா அம்மா கூட.

போலீஸ் : உங்க அப்பா அம்மா எங்க தங்கியிருக்காங்க?

பையன் : என் கூட தங்கியிருக்காங்க.

போலீஸ் : நீங்க எல்லாரும் எங்க தங்கியிருக்கீங்க?

பையன் : நாங்க எல்லாரும் ஒன்னாதான் தங்கியிருக்கோம்.

போலீஸ் : உங்க வீடு எங்க இருக்கு?

பையன் : எங்க பக்கத்து வீட்டுக்கு அடுத்து இருக்கு.

போலீஸ் : உங்க பக்கத்து வீடு எங்க இருக்கு?

பையன் : சொன்னா நம்ப மாட்டீங்க.

போலீஸ் : பரவால்ல சொல்லு.

பையன் : எங்க வீட்டுக்கு அடுத்து இருக்கு.

போலீஸ் : 😠😠

-----------------------------------------------------

ஆடு தொலைந்த கதை...!!

-----------------------------------------------------

ஒருவன் தன் நண்பர்களுக்கு விருந்து வைக்க எண்ணினான். அதற்காக தன்னுடைய வீட்டில் இருந்து ஆட்டை திருடி சென்று, இரவோடு இரவாக சமைத்து நண்பர்களுடன் தின்றுவிட்டான்.

காலையில் வீட்டிற்கு சென்றபோது அங்கு ஆடு நின்று கொண்டு இருந்தது.

இவனால் நம்பவே முடியவில்லை...

தன் மனைவியிடம் ஆடு எப்படி வந்தது? என்று கேட்டான்.

அதற்கு அவன் மனைவி... இருக்குற ஆட்டை ஏன் கேக்குறீங்க? ராத்திரியில இருந்து நாயை காணோம்... அதை தேடுங்க முதல்ல...😳😳

-----------------------------------------------------

கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாஸ்...!!

-----------------------------------------------------

அடடா பலநரி இருட்டுல கரடேறுதடா... அதுசரி அதிலொரு நரி செந்நரி.... செந்நெரி வாலிலே ஒரு பிடி நரை முடி.

கும்பகோணம் குட்டையாம் பாளையத்தில் குடியிருக்கும் குமரேசனின் குமரன் குமரப்பன், குளத்தில் குளிக்கும் போது குளிக்க வந்த குரங்குக் குட்டியை குச்சியால் குத்தினான். குரங்குக் குட்டி குதித்துக் கூப்பாடு போட்டது.

-----------------------------------------------------

பயனுள்ள குறிப்புகள்...!!

-----------------------------------------------------

1. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.

2. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக