Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 7 மே, 2021

மாம்பழம் சாப்பிட நினைத்த சிறுமி... தாயின் தியாக குணம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

-------------------------------------------------------------

இரண்டு காதுகளும் தீய்ந்துபோன நிலையில் முக்கல் முனகலோடு டாக்டரிடம் ஓடிவந்தான் ஒருவன்.

டாக்டர் : எப்படிப்பா இப்படி ஆச்சு?

வந்தவன் : நான் சட்டையை அயர்ன் பண்ணிட்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து டெலிபோன் மணி அடிச்சது. போன் ரிஸீவரை எடுத்து காதுல வைக்கறதுக்குப் பதிலா அயர்ன் பாக்ஸை வெச்சுட்டேன். காது தீஞ்சு போயிடுச்சு டாக்டர்.

டாக்டர் : சரி, இன்னொரு காதும் எப்படி தீஞ்சுது?

வந்தவன் : அந்த ராஸ்கல் மறுபடியும் போன் பண்ணினான் டாக்டர்.

டாக்டர் : 😅😅

-------------------------------------------------------------

வாடிக்கையாளர் : சார் பத்தாயிரம் ரூபாய் போட்டால் வருஷத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?

வங்கி ஊழியர் : 900 ரூபாய் கிடைக்கும் சார்.

வாடிக்கையாளர் : பத்தாயிரம் ரூபாய் போட்டால் வருஷத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?

வங்கி ஊழியர் : இப்பதான சார் சொன்னேன்.

வாடிக்கையாளர் : இது வேற பத்தாயிரம் சார்.

வங்கி ஊழியர் : 😖😖

-------------------------------------------------------------

மாயச்சதுரம்...!!

-------------------------------------------------------------

இங்கு கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைக்கு முதல் எழுத்தை மாற்றினால் வேறு பொருள் கிடைக்கும். அந்த எழுத்துக்களை கண்டுபிடியுங்கள்...!!

_குதி_குதி_குதி

விடை கீழே...!!

-------------------------------------------------------------

தியாக குணம்...!!

-------------------------------------------------------------

ஒரு சிறுமி மாம்பழம் வாங்கி வந்தாள். அதை தன் அம்மாவுக்கும் கொஞ்சம் கொடுத்துவிட்டு சாப்பிட ஆசைப்பட்டாள். எப்படி பகிர்வது என்று தெரியவில்லை. அம்மா சொன்னார், எனக்குப் பாதி கொடுத்தால் அது உன் அன்பைக் காட்டும். பாதிக்கு மேல் கொடுத்தால் அது உன் தியாகத்தைக் காட்டும். சிறுமி சிறிது நேரம் யோசித்து விட்டு, பழத்தை அம்மாவிடம் கொடுத்துவிட்டுச் சொன்னாள்... அம்மா நீங்களே பகிர்ந்து கொடுங்கள். உங்கள் தியாக குணம் எனக்குத் தெரியும்.😉😊

-------------------------------------------------------------

விடை :

-------------------------------------------------------------

தொகுதிபகுதிமிகுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக