
ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகின்றன என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் ஒப்போ நிறுவனம் கே9 டிவி வரிசையில் மூன்று அசத்தலான ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இதில் பேஸிக் எடிஷன் 43-இன்ச் எஃப் எச்டி பேனலை வழங்குகிறது. மற்ற இரண்டு டிவிகள் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் 4கே பேனலை கொண்டுள்ளன என்பது குறிப்பித்தக்கது.
குறிப்பாக ஒப்போ நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள 55-இன்ச் மற்றும் 65-இன்ச் 4கே ஸ்மாரர்ட் டிவி மாடல்கள் எச்டிஆர் 10+ மற்றும் MEMC டைனமிக் காம்பென்ஷேஷன் போன்ற அம்சங்களுடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஒப்போ ஸ்மார்ட் டிவி கே9 மாடல்களுடன் புதிய டி.டபிள்யூ.எஸ் இயர்பட்ஸ், ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போன் உள்ளிட்ட அசத்தலான சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒப்போ ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் சீனாவில் மட்டுமே வாங்க கிடைக்கும். விரைவில் இந்த புதிய சாதனங்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே குறிப்பிட்டபடி, ஒப்போ நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள 43-இன்ச் ஸ்மார்ட் டிவி FHD பேனலுடன் வருகிறது, மற்ற இரண்டு டிவிகள் - 55 இன்ச் மற்றும் 65 இன்ச் 4K டிஸ்பிளேவுடன் வருகின்றன. பின்பு இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளும் எச்டிஆர் 10 + மற்றும் டால்பி ஆடியோவை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று ஒப்போ ஸ்மார்ட் டிவிகள் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி9652 பிராசஸர் உடன் ஜி52 எம்சி1 ஜிபியு ஆதரவையும் கொண்டுள்ளன. மேலும் இந்த சாதனங்கள் 2ஜிபி ரேம் வசதியைக் கொண்டுள்ளன. பின்பு 55-இன்ச், 65-இன்ச் ஒப்போ ஸ்மார்ட் டிவிகள் 16ஜிபி மெமரி வசதியும், 43-இன்ச் ஒப்போ ஸ்மார்ட் டிவி 8ஜிபி மெமரி வசதியும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ ஸ்மார்ட் டிவி 65-இன்ச், 55-இன்ச் மாடல்களில் 15 வாட் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 10 வாட் ஸ்பீக்களை கொண்டுள்ளது. இதுதவிர இந்த மூன்று ஒப்போ ஸ்மார்ட் டிவிகளும் கலர்ஓஎஸ் டிவி 2.0 மூலம் இயங்குகின்றன.
ஒப்போ கே9 டிவிகள் வைஃபை, புளூடூத் வி 5, மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், டி.டி.எம்.பி போர்ட் மற்றும் ஈதர்நெட் போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன. மேலும் சிறந்த திரை அனுபவத்தை வழங்குகின்றன இந்த மூன்று ஒப்போ ஸ்மார்ட் டிவிகள்
அட்டகாசமான விலை
ஒப்போ ஸ்மார்ட் டிவி கே9 65-இன்ச் மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.45,600-ஆக உள்ளது.
ஒப்போ ஸ்மார்ட் டிவி கே9 55-இன்ச் மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.32,000-ஆக உள்ளது.
ஒப்போ ஸ்மார்ட் டிவி கே9 43-இன்ச் மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.22,800-ஆக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக