-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------
கணவருக்கு உடம்பு சரியில்லை. அவரை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போகிறார் மனைவி. கணவரைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர், பின்னர் மனைவிக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.
👉 டெய்லி காலையில் மறக்காமல் சாப்பிட வைங்க.
👉 அவரை எப்போதும் மகிழ்ச்சியாக, சந்தோஷமான மனநிலையில் வச்சுக்கோங்க.
👉 அவருக்குப் பிடிச்சதா, சுவையா சமைச்சுக் கொடுங்க.
👉 உங்க பிரச்சனைகளை அவரிடம் கொட்டி அவரை டென்ஷன் ஆக்காதீங்க.
👉 எப்பப் பார்த்தாலும் டிவி பாக்காதீங்க. பேஸ்புக் பாக்காதீங்க. வாட்ஸ்-அப் பாக்காதீங்க.
👉 நகை நட்டுனு கேட்டு நச்சரிக்காதீங்க. அவரை ஃபிரியா இருக்க விடுங்க. இதே மாதிரி ஒரு வருஷம் இருந்தா, உங்க வீட்டுக்காரர் நல்லாயிருவாரு. கவலைப்படாதீங்க.
ஓகே டாக்டர் நாங்க வர்றோம்.
வழியில் கணவர் மனைவியிடம் கேட்கிறார்.
ஆமா, டாக்டர் உன்னை தனியாக கூப்பிட்டு ஏதோ சொன்னாரே. என்ன சொன்னார்?
அதுவா. நீங்க பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்னு சொல்லிட்டார்.
-------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------
1. மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும். அது என்ன? பஞ்சு.
2. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது. அது என்ன? கரும்பு.
3. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார்? காற்று.
4. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள். அது என்ன? தொட்டா சுருங்கிச் செடி.
5. ஆகாயத்தில் பறக்கும். அக்கம்-பக்கம் போகாது. அது என்ன? கொடி.
-------------------------------------
முக்கிய அமிலங்கள்...!!
-------------------------------------
1. ஆப்பிளில் அடங்கியுள்ள அமிலம் மாலிக் அமிலம்.
2. ரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம் போர்மிக் அமிலம்.
3. எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் சிட்ரிக் அமிலம்.
4. வினிகரில் அடங்கியிருக்கும் அமிலம் அசிட்டிக் அமிலம்.
5. ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றில் உள்ள அமிலம் அல்கோர்பிக் அமிலம்.
6. திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் டார்டாரிக் அமிலம்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக