வியாழன், 10 ஜூன், 2021

2021-இன் முதல் சூரிய கிரகணத்தால் அதிகம் பாதிக்கப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

2021 ஆம் ஆண்டின் வருடாந்திர சூரிய கிரகணம் ஜூன் 10 ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நடக்கிறது. இந்த சூரிய கிரகணம் ஒரு நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஆகும். இது இந்தியாவில் தெரியுமா என்றால், இல்லை. இது வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, வட கனடா, கிரீன்லாந்து மற்றும் ரஷ்யாவின் வடக்கு பகுதிகளில் மட்டுமே தெரியும். இந்த கிரகணம் 3 நிமிடம் 48 வினாடிகள் வரை நீடிக்கும்.

2021 ஜூன் 10 ஆம் தேதி நடக்கும் முதல் சூரிய கிரகணம், மதியம் 01:42 மணி முதல் 06:41 மணி வரை நடக்கும். வருடாந்திர சூரிய கிரகணத்தை என்ன தான் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாவிட்டாலும், இது வாழ்வில் பல்வேறு அம்சங்களில் அதன் நல்ல மற்றும் மோசமான விளைவுகளை வழங்கும். பொதுவாக கிரகணங்கள் ராசிகளில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது 2021 ஆம் ஆண்டின் வருடாந்திர சூரிய கிரகணத்தால் 12 ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு, இந்த சூரிய கிரகணம் குடும்பம் மற்றும் குழந்தைகள் தொடர்பான மன அழுத்தங்களைக் கொடுக்கும். திடீர் மற்றும் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உடல்நிலை சரியில்லாமல் இருப்பர் மற்றும் எந்த காரணமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்வீர்கள். சூரிய கிரகணத்தால் மன அமைதி இழக்கப்படும். மேலும் நிதி இழப்பு அல்லது பணம் சிக்கிக் கொண்டு கைக்கு வராமல்இருக்கும். ஆனால் இது தற்காலிகம் தான். மேலும் ஜூன் 17 ஆம் தேதிக்கு பிறகு அனைத்தும் சரியாகிவிடும்.



ரிஷப ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல் அல்லது வாக்குவாதம் ஏற்படும். எனவே பொறுமையாக இருந்து, நிலைமையை கவனமாக கையாளுங்கள். கிரகணத்தின் தாக்கம் முடிந்ததும், அனைத்தும் சரியாகிவிடும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் ஆக்கிரமிப்பை வெளிப்படுத்துவதோடு, தங்கள் துறையில் வெற்றியையும் பெறுவார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நிதி நிலைமையில் திடீரென பின்னடைவு அல்லது இழப்பை அனுபவிப்பார்கள். குடும்ப உறுப்பினரின் உடல்நலம் உங்களை கவலையாகவும், மன அழுத்தத்துடனும் வைத்திருக்கும். உங்களின் நம்பிக்கையை இழப்பீர்கள். இதனால் எந்த ஒரு முடிவையும் எடுப்பதில் சிரமத்தை சந்திக்கலாம். சிறு காயங்கள் அல்லது வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சோதனை செய்து சரியான சிகிச்சை மேற்கொள்ளுங்கள். குழந்தைகள் மற்றும் அவர்களின் படிப்புக்கள் உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கும். ஆனால் ஜூன் 17 ஆம் தேதிக்கு பிறகு நிவாரணம் பெறுவீர்கள் மற்றும் அனைத்து விஷயங்களும் 2 மாதங்களுக்குள் தீர்க்கப்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தால் நிதி அல்லது குழந்தைகள் பிரச்சனையால் வாழ்க்கைத் துணையுடன் மோதல்கள் ஏற்படலாம். எந்தவொரு நிதி ஒப்பந்தமும் ரத்து செய்யப்படலாம் அல்லது பணம் எங்கேனும் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே ஜூலை மாதத்தின் நடுப்பகுதி வரை நிதி முதலீட்டை ஒத்தி வைக்க உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் குடும்ப உறுப்பினர் இதயம் தொடர்பான பிரச்சனைகள் அல்லது நுரையீரல் தொற்றை எதிர்கொள்ளக்கூடும். இது உங்களுக்கு கவலை மற்றும் மன அழுத்தத்தைக் கொடுக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் தொழில் வாழ்க்கையில் நல்ல பலனைத் தராது. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான வாதங்கள், மன அமைதியைக் கெடுக்கும். மேலும் உங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடும். எந்த ஒரு முடிவு எடுப்பதிலும் வாழ்க்கை துணை அல்லது நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சொத்து தொடர்பான விஷயங்களில் பணம் சிக்கிக் கொள்ளும். உங்கள் தந்தையின் உடல்நலம், உங்கள் மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கும். ஜூன் 17 ஆம் தேதிக்கு பிறகு அனைத்தும் சரியாகத் தொடங்கும். ஜூலை மாதத்தில் நிதி மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல நேர்மறையான முடிவுகளைப் பெற ஆரம்பிப்பீர்கள்.

கன்னி

சூரிய கிரகணத்தால் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வேலை மற்றும் சொத்து தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான முடிவைப் பெறமாட்டார்கள். எந்த முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகள், கண் பிரச்சனைகள் அல்லது கீழ் முதுகு பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால் இது தற்காலிகமாக ஒன்றரை மாதத்திற்கு மட்டுமே இருக்கும். அதன் பின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, வேலை அல்லது தொழிலில் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

துலாம்

சூரிய கிரகணம் துலாம் ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இந்த ராசிக்காரர்கள் சிறுநீரக தொற்று, வயிறு, குடல், சிறுநீரக பிரச்சனைகள் அல்லது கருப்பை கட்டிகள் போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான வாதத்தால் உங்கள் மன அமைதி பாதிக்கப்படும் மற்றும் ஒருவித டென்சனுடனேயே இருப்பீர்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்புக்களையும், தேவையற்ற செலவுகளையும் சந்திக்க நேரிடும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஒன்றரை மாதத்திற்குள் தீர்க்கப்படும். பணம் சிக்குவதற்கான வாய்ப்புள்ளதால், 2 மாத காலத்திற்கு சொத்து தொடர்பான விஷயங்களில் எந்த முதலீடும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்

சூரிய கிரகணத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே நிலைமையை திறமையாகவும், அமைதியாகவும் கையாள அறிவுறுத்தப்படுகிறது. சூரிய கிரகண காலத்தில் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவோ அல்லது புதிய முயற்சிகளைத் தொடங்கவோ வேண்டாம். ஏனெனில் இது நல்ல காலம் அல்ல. எந்த ஒரு புதிய முயற்சிகளையும் ஜூலை மாத இறுதிக்கு பின் தொடங்குங்கள். சூரிய கிரகணம் மன அமைதியை சீர்குலைக்கும். எனவே உடற்பயிற்சி, தியானம் அல்லது வாக்கிங் போன்ற பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளுங்கள். படிக்கும் குழந்தைகள் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள்.

தனுசு

சூரிய கிரகணம் தனுசு ராசிக்காரர்களின் குடும்பத்தை பாதிக்கும் மற்றும் நிதி இழப்பை ஏற்படுத்தும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வேகமாக வாகனத்தை ஓட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. குழந்தைகளின் எதிர்காலம் குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பதால், அவர்களின் படிப்புக்கள் குறித்து கவலைப்படுவார்கள். ஆனால் இது ஒரு தற்காலிகம் தான். 2 மாதத்திற்கு பின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, நல்ல பலன்களைப் பெறத் தொங்குவார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் சூரிய கிரகண காலத்தில் வயிற்று வலி அல்லது அஜீரணம் தொடர்பான சிறு உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படுவர். குழந்தைகளின் கல்வி கவலைக்குரியதாக இருக்கும். உங்களின் முடிவுகள் தவறாக போகக்கூடும். எனவே அடுத்த 2 மாதத்திற்கு எந்த ஒரு முக்கியமான முடிவையும் அல்லது ஒப்பந்தங்களையும் எடுக்க வேண்டாம். தம்பதியர்களுக்கு இடையே மோதல்கள் இருக்கும். ஆனால் அது விரைவில் தீர்க்கப்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் மற்றும் காயங்கள் அல்லது அறுவை சிகிச்சைக்கு கூட வாய்ப்புள்ளது. தந்தையின் உடல்நலக்குறைவு காரணமாக இந்த ராசிக்காரர்களின் மன அமைதி பாதிக்கப்படும். மேலும் இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பு மற்றும் தேவையற்ற செலவுகளையும் எதிர்கொள்வார்கள். குடும்ப உறுப்பினர்களுடனான வாதங்களைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டும். அதற்கு தியானம், நடைப்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மீனம்

சூரிய கிரகணம் மீன ராசிக்காரர்களின் நம்பிக்கை அளவை இழக்க வைக்கும். இந்த ராசிக்காரர்கள் பல தடைகளை சந்திப்பார்கள் மற்றும் நிலுவையில் உள்ள வேலையை முடிக்க கஷ்டப்படுவார்கள். குழந்தைகளின் பதற்றம் இரவு தூக்கத்தைத் தொலைக்க வைக்கும். எந்த ஒரு முடிவையும், முதலீட்டையும் எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் நீங்கள் பணத்தை இழக்க நேரிடும். இந்த ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு தான் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி தீர்வு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்