வியாழன், 10 ஜூன், 2021

கூண்டில் அடைபட்ட கிளி... தப்பிக்க வழி சொன்ன ஜோடி கிளி... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
-------------------------------------
மயில்சாமி : ஹலோ... இன்ஸ்பெக்டரா? 
இன்ஸ்பெக்டர் : ஆமா... சொல்லுங்க...
மயில்சாமி : பாரதி நகர், மூணாவது தெரு, ஏழாவது நம்பர் வீட்லேர்ந்து கேடி மயில்சாமி பேசறங்க.
இன்ஸ்பெக்டர் : ம்ம்... சொல்லுங்க... என்ன பிரச்சனை?
மயில்சாமி : மூணு ரெட்டை வடச் சங்கிலி, ரெண்டு ஜதை முத்துப் பதிச்ச வளையல், வைர மோதிரம் நாலு, இருபதாயிரம் ரொக்கப் பணம் இவ்வளவுதான் திருடியிருக்கேன். நாளைக்கு வீட்டுக்காரங்க, அதிகப்படியா சொன்னா நம்பாதீங்க!
இன்ஸ்பெக்டர் : 😳😳
-------------------------------------
பாபு : எங்கப்பாக்கு இன்டர்நெட்னா என்னனு தெரியலைடா?
கோபு : எப்படி சொல்றே?
பாபு : அது வாங்கினா கொசு கடிக்காம இருக்குமான்னு கேக்கறார்.
கோபு : 😄😄
-------------------------------------
குறளும்... பொருளும்...!!
-------------------------------------
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

பொருள் :

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
-------------------------------------
கிளியின் தந்திரம்...!!
-------------------------------------
🐦 ஆப்பிரிக்கக் கிளி ஒன்றை கூண்டினுள் வைத்து ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா செல்லும் போது கிளி சொல்லுச்சாம், 'என் ஜோடிக் கிளி அங்கிருக்கும். அதனிடம் நான் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்."

🐦 அவரும் தன் வேலை முடிந்த பின் சிரமப்பட்டு காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளியைக் கண்டு விபரம் சொல்ல, அது உடனே கண்ணீர் விட்டு கீழே சுருண்டு விழுந்து விட்டது. 'அடடா, இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகிவிட்டோமே," என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல, அக்கிளியும் கண்ணீர் விட்டு கூண்டினுள்ளேயே விழுந்து விட்டது.

🐦 நம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார். உடனே அந்தக் கிளி ஜிவ்வென்று பறந்து போய் பக்கத்திலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவர், 'உன் ஜோடிக் கிளி இறந்தது தெரிந்தும் நீ என்னிடம் நடித்துத் தப்பி விட்டாயே!" என்றார்.

🐦 அதற்கு அக்கிளியும், 'என் ஜோடிக் கிளியும் இறக்கவில்லை. கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை உங்களிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது" என்று கூறி விட்டுத் தன் ஜோடிக் கிளியைத் தேடி பறந்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்