Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 10 ஜூன், 2021

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

அமைவிடம் :

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 93வது தேவாரத்தலம் ஆகும். மகாலிங்கப் பெருமான் தன்னைத்தானே அர்ச்சித்த சிறப்புடைய தலம். இந்தத் திருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மகாலிங்க சுவாமியின் சிறப்புகள் கணக்கில் அடங்கா.

மாவட்டம் :

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

எப்படி செல்வது?

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன.

கோயில் சிறப்பு :

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமருதூர் மூகாம்பிகையும் சிறப்பும், கீர்த்தியும் வாய்ந்தவள். இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சந்நிதி உள்ளது.

அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என்று நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்.

கோயில்கள் பலவற்றுள்ளும் இந்தக் கோயிலில்தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் அதாவது 32 தீர்த்தங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் செய்தி. இவைகளில் ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் என்பது மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது.

இக்கோயில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அவை அஸ்வமேத, கொடுமுடி மற்றும் ப்ரணவ பிரகாரம் ஆகும்.

கோயில் திருவிழா :

தைப்பூச திருவிழா, வைகாசி வசந்த உற்சவ திருவிழா, திருக்கல்யாண உற்சவம், அம்பாள் தபசு, அம்பாள் தன்னைத்தானே உற்சவம் திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை ஆகிய நாட்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும்.

வேண்டுதல் :

பிரம்மஹத்தி தோஷம், நட்சத்திர தோஷம், சந்திர திசை, சந்திர புத்தி இவற்றால் ஏற்படும் தோஷம், சனி திசை, ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமத்து சனி இவற்றால் ஏற்படும் தோஷம் யாவும் தீர்க்கும் தலமாக திருவிடைமருதூர் விளங்குகிறது.

சுக பிரசவம் அடைவதற்காகவும் பெண்கள் பிரார்த்திக்கிறார்கள். இவ்வகையான பிரார்த்தனை இந்த சந்நிதியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்திக்கடன் :

பால், தயிர், பஞ்சாமிர்தம், அரிசி மாவு, தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மா பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம்.

மேலும் சுவாமிக்கு வேட்டி படைத்தல், அம்பாளுக்கு சேலை வழங்கல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.

சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக