Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 10 ஜூன், 2021

நாட்டிலேயே முதல் முறையாக சிஎன்ஜி டூர் டெலிவரி சேவை தொடக்கம்... எங்கு தெரியுமா?.. கூடுதல் கட்டணமில்லா சேவை!

இந்தியாவிலேயே முதல் முறையாக சிஎன்ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. எங்கு இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

பெட்ரோல், டீசலைப் போலவே நாட்டில் சிஎன்ஜி வாயுவையும் வாசலுக்கே தேடி வந்து கொடுக்கும் சேவை நாட்டில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இது எங்கு என்பதுகுறித்த தகவலைதான் இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

கடந்த சில மாதங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருளை வாசலுக்கே தேடி வந்துக் கொடுக்கும் சேவையை நாட்டின் முன்னணி ஆயில் நிறுவனங்கள் நாட்டில் தொடங்கின. இந்த நிலையில், தற்போது முதல் முறையாக சிஎன்ஜி எரிவாயுவையும் வாசலுக்கு தேடி வந்து வழங்கும் சேவை நாட்டில் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைநகர் டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரு நகர பகுதிகளிலேயே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே இச்சேவை முதல் முறையாக பெறுவதும் இவ்விரு நகரங்களே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒன்றிய பெட்ரோலியம் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் மற்றும் மஹாநகர் கேஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள்தான் இந்த சேவையை தொடங்கியிருக்கின்றன. இவையிரண்டும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின்கீழ் இயங்கும் எரிபொருள் விற்பனையாளர் நிறுவனம் ஆகும்.

சிஎன்ஜி வாயு தட்டுப்பாடு என்ற பேச்சுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக இத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சிஎன்ஜி எரிபொருள் நிரப்பும் மையம் செயல்படாத இடங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கிலும் இந்த சேவை நாட்டில் தொடங்கப்பட்டிருக்கின்றது.

பெட்ரோல், டீசல் பங்குகளுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி எரிவாயு நிலையங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக, நகரங்களில் மட்டுமே இந்த நிலையங்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருக்கின்றன. கிராமப்புறங்களில் சற்று குறைவாக தென்படுகின்றது.

அவ்வாறு, சிஎன்ஜி நிலையங்கள் பயன்பாட்டில் இல்லாத பகுதிகளுக்காகவே இந்த நடமாடும் சிஎன்ஜி நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக கூடுதல் கட்டணமின்றி சிஎன்ஜி வழங்கப்படும் என கூறப்படுகின்றது. வீட்டுக்கே வந்து தருவதற்கு எந்தவிதமான கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்றுதான் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவையும் கூடுதல் கட்டணமின்றி டூர் டெலிவரி சேவை செய்யப்பட்டு வருகின்றது. சிஎன்ஜி டூர் டெலிவரி சேவைக்காக 1,500 கிலோ கொள்ளளவு கொண்ட வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நாள் ஒன்றிற்கு 150 முதல் 200 எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு சிஎன்ஜி எரிவாயுவை நிரப்ப முடியும்.

மிகக் குறைந்தளவிலேயே சிஎன்ஜி வாகனங்கள் உமிழ்வை வெளியேற்றும் என்ற காரணத்தால் சிஎன்ஜி வாகனங்களை ஊக்குவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், சிஎன்ஜி விற்பனையகங்களை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே நடமாடும் சிஎன்ஜி மையங்கள் டெல்லி மற்றும் மும்பை நகரத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடமாடும் சிஎன்ஜி மையங்கள் நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட அதேசமயத்தில் நாடு முழுவதும் 201 சிஎன்ஜி நிலையங்கள் புதிதாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக