Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 10 ஜூன், 2021

கண்ணிவெடிகளை அகற்றும் "சூப்பர் எலி" பற்றித் தெரியுமா?

"சூப்பர் எலி" என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு.

"கம்போடியாவின் கதாநாயகன்" என்ற பெயரும் இவருக்கு உண்டு.

இவரது பணி கண்ணி வெடிகளை கண்டுபிடித்தல்.

போர்க்காலத்தில் கம்போடியாவில் 60 லட்சத்திற்கும் மேலான கண்ணிவெடிகள் வெடிக்காமல் கைப்பற்றப்படாமல் விடப்பட்டன.

1990களில் இருந்து 64000க்கும் மேற்பட்ட மக்கள் இதனால் மரணித்துள்ளனர்.

வெடிகுண்டுகளில் சிக்கி மக்கள் உயிரிழப்பதும் காயப்படுவதும் தொடர்ந்தன.

2018ம் ஆண்டு மட்டும் 6000-திற்கும் மேற்பட்ட மக்கள் வெடிகுண்டு விபத்திற்கு ஆளாகினர்.

இந்தச் சூழலில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பாதுகாப்புப் படையினருக்கே சவாலாக இருந்த 71 கண்ணிவெடிகளையும் 38க்கும் மேற்பட்ட வெடிபொருள்களையும் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது இந்த குட்டி எலி.

ஏழு வயதாகும் மகாவா எலிக்குப் பயிற்சி அளித்தது பெல்ஜியத்தை சேர்ந்த ABOBO என்னும் நிறுவனம்.

ஐந்து ஆண்டு பணியில் 1.41 லட்சத்திற்கும் அதிகமான சதுர அடி பரப்பு நிலங்களைக் கிளறியுள்ளது மகாவா.

இதன் சேவையைப் போற்றும் படி, அதன் ஓய்வுக்கு பிறகான நாள்கள் சுகமானதாக இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏபிஓபிஓ நிறுவனம் தெரிவித்துள்ளது.

1.2 கிலோ எடையும் 70 செ.மீ நீளமும் உடைய மகாவா ஒரு டென்னிஸ் மைதான அளவு நிலத்தை 20 நிமிடங்களில் முகர்ந்து ஆராயும் திறன் உடையது.

எடை குறைவாக இருப்பதால் எந்த இடத்திலும் உள்ள கண்ணி வெடிகளை விரைவாக கண்டுபிடிக்க முடிகிறது.

இத்தகைய திறனுடைய இந்த எலிக்கு இங்கிலாந்து தொண்டு நிறுவனம் ஒன்று தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தது.

தற்போதும் உடல் நலத்தில் குறை எதுவும் இல்லாத மகாவா, வயது முதிர்வு காரணமாகவே ஓய்வு பெறுகிறது.
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக