Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 15 ஜூன், 2021

நம்பமுடியாத விலைக்குறைப்பில் விற்பனைக்கு வரும் கூகுள் பிக்சல் 4ஏ

அதன்படி கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.31,999-ஆக இருந்தது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.26,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சலுகை குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு குறிப்பிட்ட
வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினாலும் சலுகைகள் கிடைக்கும்.

1080 X 2340 பிக்சல்கள் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சம் ஆகியவற்றை கொண்டுள்ளது கூகிள் பிக்சல் 4a . இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி இருக்கிறது.

கூகுள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் ஆனது பிக்சல் 4 இன் டோன்-டவுன் பதிப்பாக மாற்றியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730G சிப்செட் உடன் இயக்கப்படுகிறது. கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போனில் பின்புறம் மற்றும் முன்புறத்தில் சிங்கிள் கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு முதன்மை சாதனம் இல்லையென்றாலும், பின்புறத்தில் உள்ள சிங்கிள் கேமரா ஒரு இடைப்பட்ட ஸ்மார்ட்போனிலிருந்து மிகவும் எதிர்பாராதது.

ஆனால், கூகுள் ஸ்மார்ட்போனில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் கூகுள் நிறுவனத்தில் கேமரா செயல்திறன் என்பது சிறந்த அமைப்புடன் வருகிறது. சிங்கிள் கேமரா அமைப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கூகுள்
பிக்சல் 4a ஸ்மார்ட்போனின் செயல் திறன் மற்ற பிளாக்ஷிப் போன்களுக்கு நிகராக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.

இதில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி இருக்கிறது. அதோடு போர்ட்ரெய்ட் லைட் அம்சமும், எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் பயன்முறையும் இதில் உள்ளது. இதன் பேட்டரி ஆயுள் 48 மணி நேரம் வரை நீடிக்கும்.


கூகுள் பிக்சல் 4a சிறப்பம்சங்கள்
5.81' இன்ச் முழு எச்.டி பிளஸ் கொண்ட 1080 X 2340 பிக்சல்கள் உடைய ஓல்இடி டிஸ்பிளே
எச்டிஆர் ஆதரவுடன்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G சிப்செட்
6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் 128 ஸ்டோரேஜ்
அண்ட்ராய்டு 10 இயங்குதளம்
12MP பின்புற கேமரா மற்றும் எல்.ஈ.டி ஃப்ளாஷ்
8MP முன்பாக செல்ஃபி கேமரா
3.5 மிமீ ஆடியோ ஜாக்
18W ஃபாஸ்ட் சார்ஜிங்
3140 எம்ஏஎச் பேட்டரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!