Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 14 ஜூன், 2021

தொடரும் அலட்சியம்…! ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 4 வயது குழந்தை…!

சமீப காலமாக ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை அலட்சியமாக மூடாமல் விடுவதால், குழந்தைகள் இந்த கிணற்றிற்குள் விழும் சம்பவங்கள் நடக்கிறது.

அதிகரிகாரிகள் இது தொடர்பாக எச்சரித்து வந்தாலும், சிலர் அலட்சியப்போக்காக தான் செயல்படுகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பதேகாபாத் மாவட்டம் தாரியாயி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், அந்த நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றிற்குள் தவறி விழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!