Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 11 ஜூன், 2021

உஷார் மக்களே.! இந்த 5 ஆப்ஸை உடனே உங்க போனில் டெலீட் செய்யுங்கள்.. இல்லைனா வங்கியில் உள்ள பணம் அபேஸ்.!

ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்களின் கவனத்திற்கு, மீண்டும் ஆண்ட்ராய்டு பயனர்கள் மால்வேர் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்று பிட் டிபெண்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்கள் குறிப்பாக 'இந்த' 5 ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டாம் என்று பிட் டிபெண்டர் நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஸ்மார்ட்போன் ஆப்ஸ்களின் மூலம் மால்வேர் தாக்குதல்

இந்த ஆப்ஸ்களின் மூலம் மால்வேர் தாக்குதல் நடத்தப்பட்டு பயனர்களின் வங்கி விபரம், பாஸ்வோர்டு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக பிட் டிபெண்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹேக்கர்கள் குறிப்பாக ஆண்ட்ராய்டு பயனர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பல மால்வேர் ஆப்ஸ்கள் மூலம் ஹேக்கர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.

வங்கிக் கணக்கு விபரங்கள் முதல் தனிப்பட்ட தகவல்கள் வரை திருட்டு

பயனர்களின் கவனத்திற்குத் தெரியாமல் இந்த மால்வேர் ஆப்ஸ்கள் ஒரு மறைமுக கேட்வேவை (gateway) உங்கள் போனில் திறந்து, அதன் வழி ஹேக்கர்கள் உங்கள் போனில் உள்ள தகவலைத் திருட இந்த ஆப்ஸ்கள் வழிவகுக்கிறது என்று பிட் டிபெண்டர் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

நீங்கள் பயன்படுத்தும் மால்வேர் ஆப்ஸ் வழியாக உங்கள் போனிற்குள் நுழையும் ஹேக்கர்கள், உங்கள் போனில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விபரங்கள், பாஸ்வோர்டுகளை சில நொடியில் திருடிவிடுகிறார்கள்.

ஒரிஜினல் போன்ற போலி ஆப்ஸ்கள் மூலம் தகவல் திருட்டு
மேலும், திருடிய தகவல்களை வைத்து, உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை முழுமையாக அபேஸ் செய்துவிடுகிறார்கள். இன்னும் சில டார்க் வெப் ஹேக்கர்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களை வைத்து மிரட்டி, தொடர்ந்து பணம் பிடுங்கப் பார்ப்பார்கள். ஆகையால் உஷாராக இருந்துகொள்ளுங்கள்.

 பிட் டிபெண்டர் (Bitdefender) நிறுவனம் நடத்திய ஆய்வில் ஹேக்கர்கள் நம்பத்தகுந்த ஆப்ஸ்கள் போன்ற போலி ஆப்ஸ்களை உருவாக்கியுள்ளனர்.

ஹேக்கர்கள் இப்படி தான் எளிதாக உங்கள் போனில் ஊடுருவுகிறார்கள்
ஹேக்கர்கள் இப்படி தான் எளிதாக உங்கள் போனில் ஊடுருவுகிறார்கள்

அதன் வழியாக ஊடுருவுவதை பிட் டிபெண்டர் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே இருக்கும் ஆப்ஸ்கள் அல்லது ஒரிஜினல் ஆப்ஸ் போலவே இருக்கும் போலி ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும்போது ஹேக்கர்கள் எளிதாக உங்கள் போனில் ஊடுருவுகிறார்கள் என்று பிட் டிபெண்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தான் பயனர்களை எப்பொழுது கூகிள் பிளே ஸ்டோர் தவிர்த்து வேறு எந்த சர்வரில் இருந்தும் ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று கூறுகிறோம்.

உங்களை ஹேக்கர் வலையில் சிக்க வைக்க ஹேக்கர்கள் செய்யும் முக்கிய வேலையே இது தான்

அதிகளவிலான பயனர்கள் பயன்படுத்தும் வி.எல்.சி மீடியா பிளேயர், காஸ்பர்ஸ்கை ஆன்டி வைரஸ் போன்ற நம்பத்தகுந்த ஆப்ஸ்களை போலியாக உருவாக்கி, அதன்மூலம் ஊடுருவி தகவல் திருட்டில் இம்முறை ஹேக்கர்கள் ஈடுபட்டுள்ளனர். இலவச மூவிஸ், இலவச சீரிஸ்களை பார்க்கும் வசதி, கேம்களில் பங்கேற்கும் வசதி, 100 ஜிபிக்கும் மேலான இலவச டேட்டா கிடைக்கும் போன்ற பொய்யான அறிவிப்புகளை வெளியிட்டு பயனர்களைத் தனது வலையில் ஹேக்கர்கள் சிக்க வைப்பதாக பிட் டிபெண்டர் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த 5 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்

அப்லிப்ட்: ஹெல்த் அன்ட் வெல்னஸ் ஆப்ஸ் (Uplift: Health and Wellness App)
புக் ரீடர் ஆப்ஸ் (BookReader)
பிளட்டோ டீவி ஆப்ஸ் (PlutoTV)
காஸ்பர்ஸ்கை: ப்ரீ ஆன்டிவைரஸ் ஆப்ஸ் (Kaspersky: Free Antivirus)
வி.எல்.சி மீடியா பிளேயர் ஆப்ஸ் (VLC MediaPlayer)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக