வியாழன், 10 ஜூன், 2021

விமான உதவியாளர்களால் இலவசமாக விமானத்தில் பயணிக்க முடியுமா?.. இதுவர யாரும் இந்த தகவல சொல்லியிருக்க மாட்டாங்க!!

விமானத்தில் உதவியாளர்களாக பணியில் இருப்பவர்களால் இலவசமாக பயணிக்க முடியுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருப்பது உண்டு. இதனை தீர்த்து வைக்கவே இப்பதிவை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வெளியிட்டுள்ளது.

அரசு பேருந்து மற்றும் ரயில்வே துறையில் பணியாற்றுபவர்கள் அவர்களின் குடும்பத்துடன் இலவசமாக பயணங்களை மேற்கொள்ள முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதாவது, அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளிலும், ரயில்வே பணியாளர்கள் ரயில்களிலும் இலவசமாக பயணிக்க முடியும்.

இதேபோன்று விமானங்களில் பணியாற்றுபவர்களும் இலவசமாக விமானத்தில் பயணிக்க முடியுமா என்பதே பலரின் கேள்வியாக இங்கு இருக்கின்றது. குறிப்பாக, விமானங்களில் உதவியாளர்களாக பணியாற்றும் ஊழியர்களால் இலவச பயணத்தை மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.

இதுகுறித்த பதில் இதோ... விமான நிறுவனங்கள் சில அதன் பணியாளர்களை விமானங்களில் இலவசமாக பறக்க அனுமதிக்கின்றன. மூத்த பணியாளர்களைப் பொருத்து சில நிறுவனங்கள் கூடுதல் சலுகைகளைக் கூட வழங்கி வருகின்றன.

முழு விபரம்:

விமான நிறுவனங்கள் அதன் விமான உதவியாளர்கள் பணி பெண்களை இலவசமாக பறக்க அனுமதிக்கின்றன. 'ஸ்டாண்ட்-பை' எனும் பெயரில் அவர்களை இலவசமாக பறக்க அனுமதிக்கின்றன. இதற்காக குறிப்பிட்ட இலவச டிக்கெட்டுகளை நிறுவனம் ஒதுக்கி வைத்திருக்கும். அது இருக்கும் பட்சத்தில் பணியாளர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கும்.

அதேசமயம், வார நாட்களிலேயே உதவி பணியாளர்கள் இலவசமாக பறக்க நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. வார இறுதி நாட்களில் விமான போக்குவரத்து சற்று பிஸியாக இருக்கும் என்கிற காரணத்தினால் அதன் ஊழியர்களை இலவச பயணத்தை கோருவதை அந்த நாட்களில் மட்டும் தவிர்க்குமாறு கூறுவதுண்டு.

தொடர்ந்து, விமானங்களில் இருக்கை காலியாக இருக்கும் பட்சத்தில் அந்த இருக்கையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உதவி பணியாளர்கள் யாரேனும் விருப்பம் தெரிவித்தால், அப்போதும் விமான நிறுவனங்கள் இலவச பயணங்களுக்கு அனுமதிக்கின்றன.

இதுபோன்று ஒவ்வொரு விமான நிறுவனங்கள் ஒவ்வொரு தனித்துவமான கொள்கைகளுடன் அவர்களின் ஊழியர்களை இலவசமாக விமானங்களில் பறக்க அனுமதித்து வருகின்றன.

இடர்பாடுகள்

விமான உதவியாளர்கள் இலவசமாக பயணிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. விமானத்தில் இருக்கை இருக்க வேண்டும். குறிப்பாக, அந்த இருக்கைகளைக் கண்டறிவது மிகக் கடினமானது. விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் இலவச பயணங்களை கோருவது மிகவும் கடினம் என்றும் சில விமான உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சில நிறுவனங்கள் டிக்கெட்டை மட்டும் இலவசமாக வழங்கிவிட்டு, வரி, எரிபொருள் செலவு மற்றும் சில கட்டணங்களை வாங்குவதாக கூறப்படுகின்றது. தங்களுக்கு ஏற்படும் இழப்புகளை சமன் செய்ய இந்த மாதிரியான செயல்களில் ஒரு சில விமான நிறுவனங்கள் மட்டும் ஈடுபடுகின்றன.

சில நிறுவனங்கள் மிகக் குறைந்தளவு இலவச பயணங்களுக்கான அனுமதி சீட்டுகளை வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், குறிப்பிட்ட நபர் இத்தனை இலவச பயணங்களை மேற்கொள்ளலாம் என்ற திட்டத்தையும் நிறுவனங்கள் வழங்குகின்றன. அதிக பணி காரணமாக இதை பெரும்பாலானோர் பயன்படுத்திக் கொள்வதில்லை என்ற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி வருகின்றன.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்

சில முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய விமான உதவியாளர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் சில சலுகைகளை வழங்குகின்றன. தன்னைச் சார்ந்து இருப்பவர்களை விமான பயணங்களில் எடுத்து செல்ல இது விமான உதவியாளர்களுக்கு உதவியாக இருக்கும். இது விதிகளுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்