Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 11 ஜூன், 2021

பச்சை பட்டாணி காளான் மசாலா

இன்று இரவு வீட்டில் சாப்பிட என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காளான் மற்றும் பச்சை பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான பச்சை பட்டாணி காளான் மசாலா செய்யுங்கள். இந்த மசாலா சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு இது நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும். 

தேவையான பொருட்கள்: 

* காளான் - 450 கிராம் 
* பச்சை பட்டாணி - 3/4 கப் 
* வெங்காயம் - 1 (நறுக்கியது) 
* தக்காளி - 2 (நறுக்கியது) 
 * இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் 
 * பச்சை மிளகாய் - 2 
 * மிளகாய் தூள் - 1 1 /4 டீஸ்பூன் 
 * மல்லித் தூள் - 1 டீஸ்பூன் 
 * கரம் மசாலா - 1 /4 டீஸ்பூன் 
 * மஞ்சள் தூள் - 1 /4 டீஸ்பூன் 
 * கெட்டியான தேங்காய் பால் - 1 /4 கப் 
 * கொத்தமல்லி - சிறிது 
 * சீரகம் - 1 /2 டீஸ்பூன் 
 * உப்பு - சுவைக்கேற்ப 
 * எண்ணெய் - 1 1 /2 டேபிள் ஸ்பூன்

 செய்முறை: 

 * முதலில் காளானை சுத்தம் செய்து, நறுக்கிக் கொள்ள வேண்டும்.

 * பின் பச்சை பட்டாணியை நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். 

 * பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், காளானை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும். 

 * பின்பு அதே வாணலியில் மீண்டும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின் தக்காளியைப் போட்டு, உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். 
பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 

 * அடுத்து அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பச்சை மிளகாய் மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

 * மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்ததும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, சிறிது நீர் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும். 

 * பின்னர் அதில் வேக வைத்துள்ள பச்சை பட்டாணியை சேர்த்து வேக வைக்கவும். அடுத்து வதக்கி வைத்துள்ள காளானை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும். 

* இறுதியாக தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லி மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், பச்சை பட்டாணி காளான் மசாலா தயார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக