-------------------------------------
கலக்கல் காமெடி...!!
-------------------------------------
தொண்டன் 1 : நம்ம தலைவர் அநியாயத்துக்கு பிரியாணி பிரியரா இருக்காரு...
தொண்டன் 2 : எப்படி...?
தொண்டன் 1 : மாற்றுக் கட்சிக்காரங்க வெச்ச பிரியாணி விருந்துல, மாறுவேஷத்துல போய் சாப்பிட்டுட்டு வந்திருக்காரு!
தொண்டன் 2 : 😅😅
-------------------------------------
ஆசிரியர் : தண்ணீரைப் பனிக்கட்டியாக்கினால் என்ன மாற்றம் உண்டாகும்?
மாணவன் : விலை அதிகமாகும், வேற என்ன?
ஆசிரியர் : 😣😣
-------------------------------------
குட்டிக்கதை...!!
-------------------------------------
🦁ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
🦁பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு அருகில் கூட செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.
🐝ஆனால் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது. அதைப் பார்த்ததும் 🦁சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே.. உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் கீறிவிடுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.
🐝அதற்கு ஈயோ நீ பலசாலியாய் இருக்கலாம்.. உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்.. 'நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் கீறிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.
🦁இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் அதைச் செய் என சவால் விட.. 🐝ஈ பறந்து வந்து 🦁சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. 🐝ஈயை விரட்ட 🦁சிங்கம் தன் பற்களால் முயன்ற போது.. 🐝ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.
🐝ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல.. 🐝ஈ பறக்க... சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே கீறிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு 🐝ஈ பறந்தது.
🦁சிங்கத்தினால் 🐝ஈயை பிடிக்கவோ, நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாமையை எண்ணி வெட்கப்பட்டது.
🦁 அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது.. தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்.. ஒரு சிறு 🐝ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று.
நீதி : உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக்கூடாது.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக