Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 24 ஜூன், 2021

கணவனின் அன்பை பெற... தேவை புலியின் முடி... அதெப்படி? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
கலக்கலான காமெடிகள்....!!
-------------------------------------
மாப்பிள்ளை : தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி செய்யலாமா..?
தரகர் : ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
மாப்பிள்ளை : பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
தரகர் : 😅😅
-------------------------------------
பெண் வீட்டார் : என்னங்க மாப்ள படு சில்லறை பார்ட்டினு சொல்றீங்களே, பார்த்தா டீசன்;ட்டா இருக்காரே?
தரகர் : அட நீங்க வேற ஏசி ரூம்ல தான் இருப்பாருன்னு (சில் அறை) சொன்னேன்.
பெண் வீட்டார் : 😛😛
-------------------------------------
அன்பிற்கு தடை எது? 
-------------------------------------
ஒரு அபூர்வமான முனிவரிடம் பெண் ஒருவர் வந்து தன் கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக் கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.

முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்துவிட்டாள். மறுநாளும் சென்று புலியைக் கண்டாள். இன்றும் புலி உறுமியது. இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனால் அருகில் செல்ல பயமாக இருந்ததால் திரும்பி விட்டாள்.

அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக் கூடிய அளவிற்கு பழக்கம் வந்துவிட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.

'முனிவர் கூறினார் இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கிவிட்டாய். அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?"

முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது. அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்.

நீதி : நம் பயங்களும், சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும், நட்பையும் அடையத் தடையாக இருக்கக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!