Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 24 ஜூன், 2021

அருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில், கவுரிவாக்கம், சென்னை.

அமைவிடம் :

இத்தலம் சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் உள்ள கவுரிவாக்கத்தில், பழனியப்பா நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார். மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது.

மாவட்டம் :

அருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில், கவுரிவாக்கம், சென்னை.

எப்படி செல்வது?

தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. பிராட்வே மற்றும் தி.நகரிலிருந்து கிழக்கு தாம்பரம் செல்லும் பேருந்துகளில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.

கோயில் சிறப்பு :

இங்குள்ள மூலவர் அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக அருள்பாலிப்பது கோயிலின் தனி சிறப்பு. ஐந்து முகங்கள், பத்துக்கரங்களுடன் கூடிய அனுமன் சன்னதிக்கு அருகில் விஜய விநாயகர் வீற்றிருக்கின்றார். 

கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும். நரசிம்மமுகம் தீவினைகளைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், இவர் சன்னதிமுன் நிற்கும் ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டியதைக் கேட்கிறார்கள்.

அனுமனின் ஒவ்வொரு முகத்திற்கும் உரிய தனிச்சிறப்பாக, வராகஜெயந்தி, நரசிம்மஜெயந்தி, கருடஜெயந்தி, அனுமந்ஜெயந்தி, ஹயக்ரீவ ஜெயந்தி என தனித்தனியே எல்லா விசேஷங்களும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. 

ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம். அப்படி ஓர் அபூர்வ அமைப்பில் இத்தலத்தில் காணப்படுபவர்தான்; எல்லா கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய அனுமன்.

திருவிழா :

வராகஜெயந்தி, நரசிம்மஜெயந்தி, கருடஜெயந்தி, அனுமந்ஜெயந்தி, ஹயக்ரீவ ஜெயந்தி ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

பிரார்த்தனை :

தடைப்பட்ட காரியங்கள் நடக்கவும், திருமணப்பேறு, குழந்தைப்பேறு கிடைக்கவும் இங்குள்ள அனுமனை வேண்டிக் கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன் :

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் மட்டைத் தேங்காய்களை கட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக