Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 11 ஜூன், 2021

டென்ஷனா இருக்கீங்களா? சிரிப்பதற்கு நேரம் ஆச்சு... சிரிக்கலாம் வாங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------
ஒரு கணவன், மனைவிக்கு போன் பண்ணினான்... அவள் போனை எடுத்ததும் கேட்டான்.
கணவன் : எங்க இருக்க?
மனைவி : நானா... ம்ம்... வராண்டாவுல இருந்து அடுப்படி போற வழில, ஹாலுக்கு இந்தப்பக்கம் இருக்குல்ல ஒரு பெட்ரூம்... அந்த கதவுக்கிட்ட நிக்கிறேன்..
கணவன் : லூஸா நீ... வீட்டுல இருக்கேன்னு ஒரு வார்த்தைல சொல்லாம உளறிட்டு இருக்க?
மனைவி : நீ தான்டா லூஸஷு... லேண்ட் லைனுக்கு போன் பண்ணிட்டு எங்க இருக்கேன்னு கேட்டா... இப்படித்தான் சொல்ல முடியும்...
கணவன் : 😛😛
-------------------------------------
கமல் : என்ன சார் நீங்க... இவ்வளவு உரிமையோட எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு, நீங்களே சாப்பாடு எடுத்துப்போட்டு சாப்பிடுறீங்க?
விமல் : நான் உங்க சொந்தக்காரன் சார்.
கமல் : எப்படி?
விமல் : என் வீட்டு நாயும், உங்க வீட்டு நாயும் தூரத்து சொந்தம்.
கமல் : 😩😩
-------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------
ஓடும் அரசன் யார்?
.
.
.
சேரன்😇😎😌

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக