Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 14 ஜூலை, 2021

சோதனை செஞ்சாச்சு: 1000 எம்பிபிஎஸ் வேகத்தில் 5ஜி இன்டர்நெட்- கெத்து காட்டிய ஏர்டெல்!

ஏர்டெல் 5ஜி சோதனைதொலை தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி சேவைகள் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். மும்பையில் ஏர்டெல் நிறுவனம் நோக்கியா நெட்வொர்க் கியரை பயன்படுத்தி 5ஜி சோதனை நடத்தியது. 5ஜி நெட்வொர்க் சோதனையானது மும்பையில் உள்ள லோயர் பரேல் பகுதியில் நடத்தப்பட்டது. லோயர் பரேல் பகுதியில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் மாலின் நோக்கியா 5ஜி கியரை பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஏர்டெல் 5ஜி சோதனை

5ஜி சோதனையின் நிலையை பதிவு செய்வதற்கு ஏர்டெல் 5ஜி சோதனை ஸ்பீட் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இதன்படி அல்ட்ரா லோ டென்டன்சியில் 1.2 ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகமும், 850 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பதிவு செய்திருக்கிறது. ஹைதராபாத்தில் ஏர்டெல் நிறுவனம் தனியார் வணிக வலையமைப்பின் ஸ்டாண்ட் அல்லாத தனியாக நெட்வொர்க் மூலம் 5ஜி சேவையை வழங்கிய முதல் வழங்குனராக இருந்தது.

5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு

அதேபோல் ஏர்டெல் குர்கானின் சைபர் ஹப் பகுதியில் நடத்திய 5ஜி சோதேனையில் 1ஜிபிபிஎஸ் வேகத்தை பதிவு செய்தது. தற்போது மும்பையில் நடத்திய சோதனையில் 1 ஜிபிபிஎஸ் வேகத்தையும் கடந்து அதன் வேகத்தை பதிவு செய்துள்ளது. தொழில்நுட்பத்துறை மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நான்கு பகுதிகளில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு தொடக்கம் முதல் 5ஜி சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜியோ 5ஜி தீர்வு

இந்தியாவில் ஜியோ 5ஜி தீர்வுகளை நிறுவனம் சோதனை செய்துள்ளதாகவும், அதில் 1 ஜிபிபிஎஸ்-க்கும் அதிகமான வேகத்தை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளதாகவும் முகேஷ் அம்பானி கூறினார். ரிலையன்ஸ் ஏஜிஎம் 2021 நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார்.

1 ஜிபிபிஎஸ்-க்கும் அதிகமான வேகம்

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்த அறிவிப்புகளை பார்க்கையில்., இந்தியாவில் ஜியோ 5ஜி தீர்வுகளை நிறுவனம் சோதனை செய்துள்ளதாகவும், அதில் 1 ஜிபிபிஎஸ்-க்கும் அதிகமான வேகத்தை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளோம். 5ஜி புலம்-சோதனைகளை தொடங்க தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களையும் சோதனை ஸ்பெக்ட்ரம்களையும் ஜியோ பெற்றுள்ளது. மேலும் முழுமையான 5ஜி நெட்வொர்க் ஆனது நாடு முழுவதும் இருக்கும் ஜியோ தரவு மையங்களிலும், நேவி மும்பையில் சோதனை தளங்களும் நிறுவப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.

முழு அளவிலான 5ஜி சேவை

முழு அளவிலான 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் முதல் நபர் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளது என முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். அதேபோல் அறிவிக்கப்பட்ட 5ஜி-ரெடி சாதனங்களுக்கும் ஜியோ வேலை செய்யும் என கூறினார். இந்திய அளவில் 5ஜி தீர்வுகள் நிரூபிக்கப்பட்டவுடன் வெளிநாட்டில் உள்ள பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இதை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார். தொற்று பரவல் காலத்திலும் 65000 புது பணியிடங்கள் உருவாக்கி வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜியோ மற்றும் கூகுள் கிளவுட்

ஜியோ மற்றும் கூகுள் கிளவுட் ஆகியவை 5ஜி-யிலும் கூட்டாளர்களாக உள்ளன. இந்த ஒத்துழைப்பின் ஒருபகுதியாக ஜியோ தனது சில்லறை வணிகத்தை கூகுள் கிளவுட் வணிகத்திற்கு மாற்றும் என முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். ஜியோ ஃபைபர் தற்போது 3 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய நிலையான பிராட்பேண்ட் இணைய வழங்குனராகும். தற்போதுவரை ஜியோ ஃபைபர் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக