Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 8 ஜூலை, 2021

டிவிஎஸ் எண்டார்க் 125 ரேஸ் எக்ஸ்பி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

டிவிஎஸ் எண்டார்க் 125 ரேஸ் எக்ஸ்பி விற்பனைக்கு அறிமுகம்!!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், எண்டார்க் 125 ரேஸ் எக்ஸ்பி (XP) ஸ்கூட்டரை ரூ.83,275 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய டிவிஎஸ் ஸ்கூட்டரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டரின் இந்த புதிய வேரியண்ட் ஒற்றை 3-நிற பெயிண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கவுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரை ரூ.5,000 என்ற டோக்கன் தொகையுடன் டிவிஎஸ் பிராண்டின் இணையத்தள பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எண்டார்க் ரேஸ் எக்ஸ்பி ஸ்கூட்டரில் ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட் (RT-Fi) 124சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 10 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 10.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

எரிவாயு ஓட்ட இயக்கவியல் மற்றும் எரிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதால், இதில் பிஎச்பி வழக்கமான டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டரை காட்டிலும் 0.8 எச்பி அதிகரித்துள்ளதாக என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவற்றுடன் ரேஸ் & ஸ்ட்ரீட் என்ற இரு விதமான ரைட் மோட்களை எண்டார்க் எக்ஸ்பி ஸ்கூட்டர் பெற்று வந்துள்ளது. இதில் ரேஸ் மோட் ஓட்டுனர் அதிகப்பட்ச செயல்படுதிறனையையும், ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடான 98kmph வேகத்தையும் எட்ட அனுமதிக்கும்.

மறுபக்கம் ஸ்ட்ரீட் மோட், பெயருக்கு ஏற்றாற்போல் அன்றாட பயன்பாட்டிற்கு உகந்ததாக, ஸ்கூட்டரின் எரிபொருள் திறனை மேம்படுத்தும். இந்த புதிய ரேஸ் எடிசன் ஸ்கூட்டருக்கு விரைவில் அதனை தனி அடையாளப்படுத்தும் வகையில் புதிய நிறத்தேர்வை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் எண்டார்க்கிற்கு சிவப்பு மற்றும் கருப்பு நிறங்கள் அடங்கிய ஒற்றை நிறத்தேர்வு மட்டுமே இந்திய சந்தையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசனில் இந்த இரு நிறங்களுடன் கூடுதலாக சில்வர் நிறம் சேர்க்கப்பட்டுள்ளதால், தோற்றத்தில் இது சற்று வித்தியாசப்படுகிறது.

புதிய எண்டார்க் ரேஸ் எக்ஸ்பி ஸ்கூட்டரில் மற்றொரு முக்கியமான அம்சமாக டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் எக்ஸனெக்ட் இணைப்பு தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓட்டுனர் தனது ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வழியாக ஸ்கூட்டருடன் இணைத்து கொள்ளலாம்.

மேலும் இந்த தொழிற்நுட்பத்தின் செயல்பாட்டிற்காக, 15 வெவ்வேறு விதமான குரல் உத்தரவுகளுடன், குரல் உதவி வசதியையும் டிவிஎஸ் நிறுவனம் எண்டார்க் ரேஸ் எக்ஸ்பி மாடலில் கொண்டுவந்துள்ளது. இதனால் ஒவ்வொரு திருப்புதலின் போதும் நாவிகேஷன் மற்றும் ரைட் மோட்களை மாற்றுவதை ஓட்டுனர் தனது குரல் கட்டுப்பாட்டின் மூலம் செயல்படுத்தலாம்.

அதேநேரம் டிவிஎஸ் இணைப்பு அப்ளிகேஷனும் தயாரிப்பு நிறுவனத்தால் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் டிவிஎஸ் எண்டார்க்கின் வழக்கமான T-வடிவ ஹெட்லேம்ப்கள் & டெயில்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 12 இன்ச் அலாய் சக்கரங்கள், என்ஜின் கில் ஸ்விட்ச் உள்ளிட்டவற்றை இந்த புதிய ரேஸ் எடிசனும் தொடர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக