
ஹரியானாவின் ரிவாரி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, ரிவாரி உள்ள ஃபிடெடி கிராமத்தில் புதிய சிறை கட்டப்பட்டது. சனிக்கிழமை இரவு கட்டப்பட்ட புதிய சிறையின் கிரில்லை வெட்டி எடுத்து 13 கைதிகள் தப்பி சென்றுள்ளனர். அடுத்த நாள் காலையில் கைதிகள் எண்ணப்பட்டபோது, இந்த விசியம் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், எஸ்பி அபிஷேக் ஜோர்வால் சம்பவ இடத்தை அடைந்து அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார். பின்னர் தப்பிச் சென்ற கைதிகளைத் தேடும் பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அவர்கள் குறித்த தகவலையும் கிராமக மக்களுக்கு அறிவித்து வருகின்றனர்.
புதிய சிறை கோவிட் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது:
தகவல்களின்படி, ரிவாரி மாவட்டத்தின் ஃபிடெடி கிராமத்தில் புதிய சிறைச்சாலை
கட்டப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு,
சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இந்த சிறை கோவிட் சிறைச்சாலையாக
மாற்றப்பட்டது. இந்த சிறையில், மாநிலம் முழுவதிலும் இருந்து கோவிட்
தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 450 கைதிகள், இந்த சிறைக்கு
மாற்றப்பட்டுள்ளனர்.
இரவு நேரத்தில் கிரில்லை வெட்டி தப்பித்தனர்:
சனிக்கிழமை இரவு, அதே அறையில் தங்கியிருந்த 13 கைதிகள் கிரில்லை வெட்டிய
பின் வெளியேறியுள்ளனர். பின்னர் ஒரு கயிற்றின் மூலம் சிறையின் சுவரில் ஏறி
தப்பினர். தப்பிச் சென்ற கைதிகள் அனைவரும் தீவிர சட்டபிரிவுகளின் கீழ்
சிறையில் அடைக்கப்பட்டவர்கள். ஞாயிற்றுக்கிழமை காலை கைதிகள்
கணக்கிடப்பட்டபோது, 13 கைதிகள் குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது.
தேடும் பணியில் காவல்துறை அதிகாரிகள்:
சிறையிலிருந்து கைதிகள் தப்பித்தது குறித்த தகவல்கள் வெளியானவுடன், சிறை
நிர்வாகத்தினர் இடையே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. மாவட்டம் முழுவதும்
தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணியில் போலீஸ் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக