Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 14 ஜூலை, 2021

இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.!

ம்சங் ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்வது மிகவும் நல்லது. அதாவது இதில்

சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இவற்றில் ஒரு சில பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது ரெட்மி, ரியல்மி ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விரைவில் தரமான சிப்செட் வசதியுடன் வருவதால் அதிக மக்கள் இவற்றை தேர்வு செய்கின்றனர். அதேபோல் மோட்டோ, சாம்சங் ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் கிடைக்கின்றன.

குறிப்பாக சாம்சங் ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்வது மிகவும் நல்லது. அதாவது இதில் தனித்துவமான சிப்செட் வசதி மற்றும் தரமான கேமரா உட்பட பல்வேறு அம்சங்கள் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். சரி இப்போது இந்தியாவில் ரூ.15000-க்கு
கீழ் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி40 ஃபியூஷன்

4ஜிபி ரேம் கொண்ட மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின் விலை ரூ.16,499-ஆக உள்ளது. ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி சிப்செட் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. எனவே கேமிங் உட்பட அனைத்து வசதிகளுக்கும் அருமையாக பயன்படுத்த முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் டிஸ்பிளே, 6000 எம்ஏஎச் பேட்டரி, டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் மோட்டோ ஜி40 ஃபியூஷன் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி40 ஃபியூஷன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்32

4ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் கொண்ட
வேரியண்டின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. மேலும்கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர்AMOLED Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது கேலக்ஸி எம்32.

மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி (Samsung ISOCELL GW3) சென்சார் + 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்மாடல்.

ரெட்மி நோட் 10எஸ்

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் சாதனத்தின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் சாதனத்தின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. 6.43-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே, 20:9 என்ற திரைவிகிதம், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரிஉள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி 8 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 5ஜி சாதனத்தின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 nits பிரைட்னஸ், மீடியாடெக் Dimensity 700 5ஜி சிப்செட்,5000 எம்ஏஎச் பேட்டரிஉள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி

4ஜிபி ரேம் கொண்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.குறிப்பாக 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080x2400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சாதனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக