Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 15 ஜூலை, 2021

அடுத்த மிட்-ரேஞ்ச் விலை ஸ்மார்ட்போன்- ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி விலை இதுதான்?

விலை மற்றும் வண்ண விருப்பங்கள்

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வண்ண விருப்பங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. ஒன்பிளஸ் ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவில் நோர்ட் 2 5ஜி சாதனத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் அடுத்த ஜென் நோர்ட் சாதனத்தின் செயலி இடம்பெறும் எனவும் காட்சி வடிவமைப்பு மாற்றம் போன்ற சில அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்துள்ளது. சமீபத்திய தகவலின்படி ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி இரட்டை சேமிப்பு வகைகளில் வரும் எனவும் இதன் விலை ரூ.31,999 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

விலை மற்றும் வண்ண விருப்பங்கள்

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி விலை மற்றும் வண்ண விருப்பங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இந்த தகவலானது டிப்ஸ்டர் யோகேஷ் உடன் இணைந்து 91 மொபைல்கள் பகிரப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு என்ற இரண்டு வேரியண்ட்களில் வருகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.31,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.34,999 ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நார்ட் 2 சாதனம் கிரே சியரா மற்றும் ப்ளூ ஹேஸ் வண்ண விருப்பங்களில் வரும் என புதிய அறிக்கை தெரிவிக்கிறது. அதேபோல் க்ரீன் வூட்ஸ் வண்ணத்துடன் சிறப்பு லெதர் பேக் பதிப்புல் இதில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி 6.43 இன்ச் டிஸ்ப்ளே வசதியோடு 90 ஹெர்ட்ஸ் திரவ அமோலெட் காட்சி வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இது எச்டிஆர் 10+ சான்றளிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீடியோடெக் டைமன்சிட்ட 1200 ஏஐ எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் அனைத்து பக்கங்களிலும் மெலிதான பெசல்கள், செல்ஃபி கேமரா சென்சார் வைக்க இடது மூலையில் பஞ்ச் ஹோல் வடிவமைப்பும் இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ்

நோர்ட் 2 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மோனோ சென்சார் ஆகிய மூன்று பின்புற கேமராக்கள் இடம்பெற்றுள்ளன.

4000 எம்ஏஎச் பேட்டரி

அதேபோல் முந்தைய ஜென் நோர்ட் ஸ்மார்ட்போனில் இடம்பெற்ற இரட்டை கேமராவிற்கு பதிலாக 32 எம்பி சென்சாருடன் வரும் எனவும் கூறப்படுகிறது. நோர்ட் 2 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் இதில் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு இன்-டிஸ்ப்ளே ஸ்கேனர் வசதி இதில் இடம்பெறும் என கூறப்படுகிறது.

மலிவான சாதனமாக இருக்க வாய்ப்பு

ஒன்பிளஸ் நோர்ட் 2 தொடரில் இருந்த மிகவும் விலை உயர்ந்த சாதனமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஐக்யூ 7 மற்றும் வரவிருக்கும் போக்கோ எஃப் 3 ஜிபி போன்ற மிட்-ரேஞ்ச் சாதனங்களுக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. டைமன்சிட்டி 1200 சிப்செட் மூலம் இயக்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போக்கோ எஃப் 3 ஜிடி ரூ.30,000 பிரிவுகளில் வரவிருக்கும் நோர்ட் 2 உடன் ஒப்பிடும்போது மலிவான சாதனமாக இருக்கும். இதன் அதிகாரப்பூர்வ விலை மற்றும் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக