
அமைவிடம் :
நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் மதுரை மாவட்டத்தில் உள்ளது. நவகிரகங்களை வணங்கி பெறும் பலன்களை, விஷ்ணுவின் அவதாரங்களை வணங்கிபெறலாம். அவ்வகையில் இங்குள்ள நரசிம்மர், செவ்வாய் கிரகத்தை ஒத்துள்ளார்.
மாவட்டம் :
அருள்மிகு நரசிங்கப்பெருமாள் சுவாமி திருக்கோயில், மன்னாடிமங்கலம், சோழவந்தான் வழி, மதுரை மாவட்டம்.
எப்படி செல்வது?
மதுரையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. குருவித்துறை செல்லும் பேருந்துகளில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.
கோயில் சிறப்பு :
இத்தலத்தில் உள்ள நரசிங்கர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.
மூலவரின் திருநாமம் நரசிங்க பெருமாளாக இருந்தாலும், முகம் நரசிம்மருக்கு உரியதைப்போல் இல்லாமல் பெருமாளைப்போல தோற்றமளிக்கிறார்.
மண்டபத்தின் மேல்பகுதியில் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் உணர்த்தும் விதமாக ஒரே சிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளதும், முன்புறம் யானையும், சிங்கமும் தவம் செய்யும் கோலத்தில் 'கஜகேசரி"யாக உள்ளதையும் காண கண்கோடி வேண்டும்.
இத்தலத்தில் மா, பலா, வாழை ஆகிய முக்கனி மரங்கள் தலவிருட்சங்களாக உள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூரில் காட்சி தருவதைப்போலவே, இங்குள்ள ஆண்டாள், முன்புறம் துளசிமாடம், பின்புறம் தீர்த்தத்தொட்டி அமைந்திருக்க மத்தியில் அருளுகிறாள்.
இங்குள்ள நரசிம்மர், செவ்வாய் கிரகத்தை ஒத்துள்ளார். எனவே, இவரை வணங்கினால் செவ்வாய் தோஷம் நீங்கி, தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
திருவிழா :
வைகுண்ட ஏகாதசி, தனுர்மாத பூஜை, திருக்கார்த்திகை தீபம் ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
பிரார்த்தனை :
திருமணத்தடை நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, நல்ல இல்வாழ்வு அமைய, செவ்வாய்தோஷம் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன் :
நரசிம்மருக்கு பட்டு வஸ்திரங்கள் சாற்றி, திருமஞ்சனம் செய்து திருவாபரணங்கள் செலுத்தலாம்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக