சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
-------------------------------------------------
ரமேஷ் : நீ எழுதறதை எவனும் படிக்க மாட்டான்..
தினேஷ் : அது எங்களுக்கும் தெரியும்.. தன் கையே தனக்கு உதவி, நாங்களே எழுதி நாங்களே படிச்சுப்போம்.
ரமேஷ் : 😏😏
-------------------------------------------------
கமல் : என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது?
விமல் : நான் தான் சொன்னேனே... என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு.
கமல் : 😜😜
-------------------------------------------------
தன்னம்பிக்கை வரிகள்...!!
-------------------------------------------------
காலம் ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு நல்ல மாற்றத்தையும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நல்ல வழியையும், முயற்சித்தவர்களுக்கு நல்ல முடிவையும் நிச்சயம் தரும் அதுவரை காத்திருங்கள்.
வாழ்க்கையில் வீணாக கடந்ததையும், நடந்ததையும் மறந்துவிடுங்கள். இனி கடப்பதையும், நடப்பதையும் கவனமாக கையாளுங்கள்.
எந்த இடத்தில் உங்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கிறார்களோ, அதே இடத்தில் இறைவன் உங்களை செதுக்கி உயர்த்தி வைப்பார் கவலையின்றி செயல்படுங்கள்.
-------------------------------------------------கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாஸ்...!!
-------------------------------------------------
கஞ்சி ஊத்த ஆள் இல்லன்னாலும் கட்சி கட்ட ஆளு வேணும்னு கெஞ்சிப் பேச வாஞ்சித்த வஞ்சியை மிஞ்சிய பிஞ்சுநெஞ்சு கொஞ்சியழைத்தது.
உனக்கும் எனக்கும், பிறர்க்கும் உனக்கும், எனக்கும் பிறர்க்கும், அவர்க்கும் நமக்கும், இவர்க்கும் அவர்க்கும், பெரிதான பிரதான ஒற்றுமை மானிடப் பிறவியே.
தள தள மாமியின் வழ கொழ பேச்சைக் கேட்டு தட புடலாய் செலவு செய்து வழக்கத்துக்கு மாறான பழக்கத்தைப் புழக்கத்தில் கொண்டு வாழும் வாழ்க்கை வழுவியும் வேண்டாமே.
-------------------------------------------------
-------------------------------------------------
இது எப்படி இருக்கு?
-------------------------------------------------
நம்ம வீட்ல இருக்குற பர்னிச்சர்ஸ் ரூ ஹோம் அப்ளையன்ஸஸ்க்கு எல்லாம் திடீர்னு பேசுற சக்தி வந்தா எப்டி இருக்கும்?
💺 சேர்
வெயிட்ட குறை, குறைவா தின்னுன்னு சொன்னா கேக்குரியா.. மாடு மாதிரி கனத்துக் கிடக்குற பாரு..
☢ ஃபேன்
நீ இப்போ என்ன வேல பாத்து கிளிச்சுட்டனு என்னய இப்படி சுத்தவிடுற?
📺 டிவி
ஏன்டா என் புள்ளய (ரிமோட்) போட்டுப் பாடா படுத்துறீங்க?
☺ தலையணை
நாளைக்காவது குளிடா...!! நாத்தம் கொடலப் புடுங்குது...!!!
⛄ ஃப்ரிட்ஜ்
சாம்பாரு, புளிக்கொழம்பு, மீந்து போன காய்கறி... இதத்தவிர வேற எதையுமே வைக்க மாட்டீங்களா டா...??
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக