
மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்கவே. நம் கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ மற்றும் தீமையோ நடந்தவண்ணம் இருக்கும். ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே. அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.
இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இப்படிப்பட்ட செய்வினை ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. அதன் முழு விவரத்தை இங்கே படிக்கவும்.
தேவையான பொருட்கள் மற்றும் அதன் அளவு
வெண்கடுகு - 250 கிராம்
நாய்க்கடுகு - 250 கிராம்
மருதாணி விதை - 250 கிராம்
சாம்பிராணி - 250 கிராம்
அருகம்புல் பொடி - 50 கிராம்
வில்வ இலை பொடி - 50 கிராம்
வேப்ப இலை பொடி - 50 கிராம்
முதலில் சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொள்ளவும். பிறகு மேலே கொடுக்கபட்டுள்ள மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். உங்களுக்கு நிச்சயம் பலனுண்டாகும். இதை செய்வதால் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக