Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 13 ஜூலை, 2021

ரூ.399-க்கு வரம்பற்ற டேட்டா, குரல் அழைப்பு நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோ சிறந்த திட்டம் திட்டம்!

 புதிய போஸ்ட்பெய்ட் ஜியோ ஃபைபர் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் போஸ்ட்பெய்ட் பிராட்பேண்ட் திட்டங்களானது இந்தியாவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தை பெறுவதற்கு முன் கட்டணங்களோ, வைப்புத் தொகையோ வழங்க தேவையில்லை என்பதாகும். ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களானது போஸ்ட்பெய்ட் பில்லிங் விருப்பத்தில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய போஸ்ட்பெய்ட் ஜியோ ஃபைபர் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ புதிய போஸ்ட்பெய்ட் ஜியோ ஃபைபர் திட்டங்களை 4கே செட் டாப் பாக்ஸ் உடன் அறிமுகம் செய்தது. இந்த சேவையானது ரூ.399 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டமானது பெரிதும் பயன்படக்கூடிய 4கே செட்டாப் பாக்ஸை இலவசமாக வழங்குவதால் இலவச திட்டமாகவே கருதப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் சலுகையாக மாதந்தோறும் ரூ.399 செலுத்தியோ அல்லது போஸ்ட்பெய்ட் திட்டத்தின் மூலமாக 6 மாதம் அல்லது 12 மாதம் சலுகையிலோ கிடைக்கிறது.

வைப்புத் தொகையாக ரூ.1000 செலுத்த வேண்டும்

இருப்பினும் இந்த திட்டங்களில் இணையக் கூடிய சந்தாதாரர்கள் திருப்பி செலுத்தக் கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூ.1000 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனம் வழங்கும் ஓடிடி செட் டாப் பாக்ஸ்-ல் ஓடிடி இணைப்புகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சாதாரண டிவியையும் ஸ்மார்ட்டிவியாக மாற்றலாம்.

30 நாட்கள் வேலிடிட்டி

ரூ.399 மதிப்புள்ள ரிலையன்ஸ் ஜியோவின் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. 30 எம்பிபிஎஸ் வேகத்துடன் வரம்பற்ற டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நிமிடங்களுக்கான லேண்ட்லைன் இணைப்பு வழங்குகிறது. இருப்பினும் இந்த திட்டத்தில் எந்த ஓடிடி நன்மையும் கிடையாது.

100 எம்பிபிஎஸ் வரை வேகம்

ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டத்தை பொறுத்தவரையில் இதில் 100 எம்பிபிஎஸ் வரை வேகத்தை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நிமிடங்களை வழங்குகிறது. ஓடிடி நன்மைகள் இல்லை என்றாலும் இதில் லேண்ட்லைன் இணைப்பு சலுகை கிடைக்கிறது.

சிறந்த சலுகையோடு போஸ்ட்பெய்ட் திட்டம்

ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டமும் சிறந்த சலுகையோடு இருக்கிறது. இதில் இணைய வேகம் 150 எம்பிபிஎஸ் வேகத்துடன் வருகிறது. அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி, சோனி லைவ், ஜீ5 சந்தா ஆகிய அணுகல் கிடைக்கிறது. இது ரூ.1000 மதிப்புள்ள 14 ஆப்ஸ்களின் சலுகை சந்தாக்கள் இருக்கிறது.

வரம்பற்ற இணைய சேவை

அதிவேக திட்டத்தை தேர்வு செய்ய விரும்பினால் ரூ.1499-க்கு 300 எம்பிபிஎஸ் திட்டமும் ரூ.2499-க்கு 500 எம்பிபிஎஸ் திட்டமும் இருக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற இணைய சேவை மற்றும் உள்ளூர் வெளியூர் அழைப்பு நிமிடங்கள் போன்றவைகளை வழங்குகிறது. அது மட்டுமின்றி ரூ.1500 மதிப்புள்ள 15 ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கான இலவச சந்தாக்கள் கிடைக்கிறது.

அதிக இணைய தேவை இருப்பவர்களுக்கான திட்டம்

அதேபோல் ரூ.3999 மற்றும் ரூ.8499 திட்டமானது 1ஜிபிபிஎஸ் வேகத்தோடு வருகிறது. இந்த திட்டங்களின் தனித்துவ அம்சம் அதேவேகத்தில் வரம்பற்ற டேட்டா ஆகும். ரூ.3999 ரீசார்ஜ் திட்டத்தில் 3300 ஜிபி இணைய வேகம் மற்றும் ரூ.8499 ரீசார்ஜ் திட்டத்தில் 6600 ஜிபி இணைய வேகத்தையும் வழங்குகிறது. இந்த திட்டம் பெருமளவு இணைய தேவை இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

6 மாதகால பில்லிங் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டம்

6 மாதகால பில்லிங் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து பார்க்கையில், இதில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் ரூ.2394 எனவும் 100 எம்பிபிஎஸ் திட்டத்தில் ரூ.4994 செலுத்த வேண்டியிருக்கும். மேலும் ரூ.5994 செலுத்துவதன் மூலம் 150 எம்பிபிஎஸ் இணைய வேகம் கிடைக்கும். இந்த திட்டங்கள் அனைத்தும் 6 மாதம் செல்லுபடியாகும். அதேபோல் ரூ.8994 செலுத்துவதன் மூலம் 300 எம்பிபிஎஸ், ரூ.14994 செலுத்துவதன் மூலம் 500 எம்பிபிஎஸ், ரூ.23994 செலுத்துவதன் மூலம் 1 ஜிபிபிஎஸ் இணைய வேகத்தையும் பெறலாம். பணிகளுக்கு இணைய தேவை பயன்படுத்துவோருக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

12 மாத போஸ்ட்பெய்ட் திட்டம்

மேலும் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் 12 மாத போஸ்ட்பெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கையில், ரூ.4788-க்கு 30 எம்பிபிஎஸ் இணைய வேகமும், ரூ.8388 மற்றும் ரூ.11988 ஆகிய விலையில் 100 எம்பிபிஎஸ் மற்றும் 150 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்குகிறது. பிற பிராட்பேண்ட் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் ஜியோ ஃபைபர் போஸ்ட்பெய்ட் பில்லிங் திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக