
சமீப காலமாக டிஜிட்டல் தளங்களில் ஏராளமான சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தில் உள்ள பல நாடுகளில் ரான்சம்வேர் (ransomware) தாக்குதல்கள் தலை ஓங்கத் துவங்கியது. ரான்சம்வேர் அட்டாக் என்று அழைக்கப்படும் இந்த மோசமான சைபர் தாக்குதல் படிப்படியாக அதன் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இப்போது, யாரும் எதிர்பார்த்திடாத வகையில், பூமியின் மிகப்பெரிய ரான்சம்வேர் தாக்குதல் ஜூலை 2ம் தேதி நடந்தேறியுள்ளது.
ரான்சம்வேர் என்றால் என்ன? அது எப்படி மற்ற மால்வேரில் இருந்து வேறுபடுகிறது?
இந்த ரான்சம்வேர் தாக்குதல் இதுவரை அறியப்பட்ட தாக்குதல்களை விட பல மடங்கு பெரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரான்சம்வேர் பற்றி தெரியாதவர்களுக்கு முதலில் ரான்சம்வேர் என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்வோம். ரான்சம்வேர் என்பது கிரிப்டோவைராலஜியிலிருந்து வரும் ஒரு வகை தீம்பொருளாகும். தீம்பொருள் என்பது மால்வேர் அல்லது வைரஸ் என்று அழைக்கப்படுகிறது.
தனிப்பட்ட தரவுகளை அம்பலப்படுத்தும் அச்சுறுத்தல்
இது முதலில் பாதிக்கப்பட்டவரின் சாதனத்தில் இருக்கும் அனைத்து வகையான தனிப்பட்ட தரவுகளை முடக்கம் செய்கிறது.ரான்சம்வேர் தாக்குதலில் பாதிக்கப்பட்டு முடக்கம் செய்யப்பட்ட சாதனத்தின் உள்ள தனிப்பட்ட தரவுகளை வெளி உலகிற்கு அம்பலப்படுத்தும் அச்சுறுத்தலுடன் இந்த தாக்குதல் செயல்படுகிறது. இந்த தாக்குதலில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமானால் அதற்கான மீட்டெடுக்கும் ஒரு பெரிய தொகை நீங்கள் கட்டாயம் செலுத்தியாக வேண்டும்.
இதில் இருந்து தப்பிக்க என்ன வழி இருக்கிறது?
ரான்சம்வேர் தாக்குதலை நடத்திய ஹேக்கர்கள் கேட்கும் பணத்தை நீங்கள் வழங்கினால் மட்டுமே உங்கள் தகவல் டார்க் வெப்பில் அம்பலம் ஆகாமல் இருக்கும். ஹேக்கர்கள் கேட்கும் பணத்தை வழங்காமல் தகவலை மீட்டெடுக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்றால்? உண்மையில் அப்படி ஒரு வழி இல்லை என்பது தான் வேதனை. ஹேக்கர் கேட்கும் பணத்தை நீங்கள் கொடுத்தாக வேண்டும், இதனால் தான் இந்த தாக்குதலுக்கு 'ரான்சம்'வேர் (ransom) என்று பெயரிடப்பட்டது. மற்ற மால்வேர் போன்று இது செயல்படுவதில்லை.
கசேயா வி.எஸ்.ஏ (Kaseya VSA) மீது ரான்சம்வேர் தாக்குதல்
இப்போது, ஐடி மென்பொருள் வழங்குநரான கசேயா வி.எஸ்.ஏ (Kaseya VSA) நிறுவனத்தை முடக்கம் செய்யும் சப்ளை சங்கிலி ransomware தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. REvil ransomware என்ற கும்பல், இப்போது அதன் இருண்ட வலைத்தளமான ஹேப்பி வலைப்பதிவில் இந்த தாக்குதல் தொடர்பான பதிவைப் பதிவிட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்டெடுக்கும் தொகை எவ்வளவு என்பதை அந்த கும்பல் குறிப்பிட்டுள்ளது.
மில்லியனுக்கும் அதிகமான யூனிட்கள் ரான்சம்வேர் தாக்குதலால் பாதிப்பு
இந்த தாக்குதல் மூலம் இம்முறை மில்லியனுக்கும் அதிகமான யூனிட்கள் ரான்சம்வேர் மால்வேரால் பாதிப்படைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.REvil ransomware கும்பல் வெளியிட்ட அந்த இடுகையின் படி, சோடினோகிபி என்றும் அழைக்கப்படும் ரெவில் ரான்சம்வேர் கும்பல் கூறியுள்ளதாவது, "ஒரு மில்லியனுக்கும் அதிகமான யூனிட்கள் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, இவற்றை மீண்டும் மீட்டெடுத்துப் பயன்படுத்த பயனர்கள் மொத்தமாக 70 மில்லியன் டாலர் தொகையைத் தரவேண்டும்" என்று அந்த ஹேக்கர் கும்பல் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட தகவலை மீட்டெடுக்க 520 கோடி ரூபாய் தேவையா?
இது இந்திய மதிப்பின் படி சுமார் 520 கோடி ரூபாய் ஆகும். இந்த தாக்குதல் ஜூலை 2ம் தேதி நடத்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்பொழுது மீட்கும் கோரிக்கை வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய இந்த தாக்குதலுக்கான டிக்ரிப்டிங் (decrypting) பற்றி யாராவது பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், ''எங்கள் விலை BTC இல் 70,000,000 டாலர் ஆகும் என்பதைக் கவனிக்க மறக்காதீர்கள்.
பணம் கொடுத்தால் 'டிக்ரிப்டரை' கும்பல் உடனடியாக வெளியிடும்
இந்த தொகையை கொடுத்துவிட்டால் பாதிக்கப்பட்ட அனைவரின் கோப்புகளையும் டிக்ரிப்ட் செய்யும் பகிரங்கமாக டிக்ரிப்டரை கும்பல் உடனடியாக வெளியிடும் என்று கூறியுள்ளது.இந்த டிக்ரிப்டரை பயன்படுத்தி அனைவரும் ஒரு மணி நேரத்திற்குள் தாக்குதலில் இருந்து மீள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட "readme" கோப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று அந்த கும்பல் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக