Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 19 ஜூலை, 2021

புதைத்து மிதித்தாலும் விதையாக மாறி முளைத்து நிற்பவர் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!!
-------------------------------------
நோயாளி : டாக்டர்.. எனக்கு டைஃபாய்டா... என் நண்பர் ஒருத்தர் டைஃபாய்ட் வந்துதான் செத்தார்.. நானும் அப்படி செத்துடுவேனா?
டாக்டர் : கவலைப்படாதீங்க.. அப்படி ஏதாவது ஆச்சுன்னா.. உங்களுக்கு வந்தது மலேரியான்னு சொல்லிடறேன்.
நோயாளி : 😮😮
-------------------------------------
கணவன் : பாயசம் தான் ரெடியாயுடுச்சே, அப்புறம் ஏன், பாயசம் 1 தரம், பாயசம் 2 தரம், பாயசம் 3 தரம்-ன்னு கத்தற?
மனைவி : பாயசம் இறக்கின உடனே ஏலம் போட சொன்னாங்க, அதான்.
கணவன் : 😬😬
-------------------------------------
தன்னம்பிக்கை...!!
-------------------------------------
பதற்றமாக இருந்தால் என்னைப் பற்றி சிந்தியுங்கள். 

கவலையாக இருந்தால் என்னை அழையுங்கள். 

தனிமையில் இருந்தால் என்னைப் பாருங்கள். 

சோர்ந்திருந்தால் என்னை கனவு காணுங்கள். 

இப்படிக்கு தன்னம்பிக்கை. 

தன்னம்பிக்கை மற்றும் முயற்சி உள்ளவனை, புதைத்து மிதித்தாலும் விதையாக மாறி முளைத்து நிற்ப்பான் மரமாக.
-------------------------------------
அட அப்படியா?
-------------------------------------
அமிலம் :

உமிழ்நீருக்கு அடுத்தபடியாக செரிமானத்திற்கு உதவுவது அமிலம். இந்த அமிலம் இயற்கையாகவே நமது உடலில் சுரக்கும்.

உணவு வயிற்றுக்குள் சென்றதும் இந்த அமிலமானது நொதித்தல் முறையில் உணவை செரிக்க வைக்கிறது. இந்த அமிலம் மிதமானதாக இருப்பதுதான் உடலுக்கு நல்லது. உணவு சாப்பிட்ட உடன் அதிக அளவு நீர் அருந்துவதை குறைத்துக் கொள்ளவும்.

எப்பொழுதும் சாப்பிட்டு 20 நிமிடம் கழித்துதான் நீர் அருந்த வேண்டும். சாப்பிட்ட உடன் அளவுக்கு அதிகமான நீர் அருந்துவதால் இந்த அமிலமானது நீர்த்து போய்விடும். இதனால் செரிமானத்தின் அளவு குறையும். இந்த அமிலத்தின் தன்மை எப்படி இருக்குமென்றால் ஒரு உலோகத்தையே கரைக்கும் அளவிற்கு இருக்குமாம்.
-------------------------------------
கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும் 
-------------------------------------
நாம் அறிந்த விளக்கம் :
-------------------------------------
கைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

விடாமுயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல, அந்த விடாமுயற்சிக்கு மிகுந்த உடல்வலிமை, மனவலிமை வேண்டும் என்பது தான் இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக