----------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்....!!
----------------------------------------------
தங்கமணி : அவர் வீடு 'கமகம"ன்னு வாசனையா இருக்கே ஏன்?
ரங்கமணி : நாலு 'சென்ட்" நிலத்தில் கட்டின வீடாச்சே அது!
தங்கமணி : 😂😂
----------------------------------------------
அமலா : இளைக்கிற மருந்தை வாங்கிட்டு சாப்பிடாம இருக்காரே ஏன்?
விமலா : நாளைக்கு அவருக்கு கட்சில எடைக்கு எடை தங்கம் தரப்போறாங்களாம்... அதான்.
அமலா : 😛😛
----------------------------------------------
தன்னம்பிக்கை வரிகள்...!!
----------------------------------------------
💫 உங்கள் எண்ணங்களே உங்களை இயக்குகிறது.
💫 உங்கள் எண்ணங்கள் எனும் எரிபொருள் கொண்டுதான் இயந்திரம் எனும் உங்கள் உடம்பு இயங்குகிறது.
💫 உங்கள் வாகனத்திற்கு எரிபொருளை வாங்கித் தான் பயன்படுத்த வேண்டும்.
💫 ஆனால் இறைவன் படைப்பில் உங்களை இயக்குவதற்கான எரிபொருளை உங்களிடமே கொடுத்துள்ளார்.
💫 தூய்மையான நல்ல எண்ணங்கள் எனும் எரிபொருள் கொண்டு, வாழ்க்கை எனும் வண்டியில் பயணம் செய்யுங்கள். வெற்றி எனும் நீங்கள் அடையும் இடம் மிக அருகாமையில்.
---------------------------------------------
பண்டாரப் பாட்டு!!
----------------------------------------------
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயிலே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பாரதியார்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக