
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தியிருந்தாலும், கொரோனாவுக்கு பிந்தைய சிக்கல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மியூகோர்மைகோசிஸ் (கருப்பு பூஞ்சை), புதிய சர்க்கரை நோய், இரத்த உறைவு, இதய பிரச்சனைகள், சுவாச மற்றும் நுரையீரல் சிக்கல்கள் போன்ற பல கொரோனாவுக்கு பிந்தைய சிக்கல்கள் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தற்போது
கொரோனாவில்
இருந்து
தப்பிப்
பிழைத்தவர்களுக்கு
ஓர்
புதிய
சவாலை
மருத்துவர்கள்
அறிவித்துள்ளனர்.
அது
தான்
எலும்பு
இறப்பு.
அறிக்கையின்
படி,
மும்பை
மருத்துவமனைகளைச்
சேர்ந்த
மருத்துவர்கள்
அவாஸ்குலர்
நெக்ரோசிஸ்
(AVN)
என்னும்
எலும்பு
இறப்பு
வழக்கு
கொரோனாவில்
இருந்து
குணமான
நோயாளிகளிடையே
கவனித்துள்ளனர்.
இதுக்குறித்து
நிபுணர்கள்
தொடர்ந்து
கவனித்து
வரும்
போது,
இது
கொரோனாவுக்கு
பிந்தைய
ஓர்
தீவிர
சிக்கலாக
நம்பப்படுகிறது.
தற்போது அவாஸ்குலர் நெக்ரோசிஸ் (AVN) கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நோயாளிகளில் சில மாதங்கள் கழித்து காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே இது ஒரு கொரோனாவுக்கு பிந்தைய சிக்கலாக ஊகிக்கப்படுகிறது. இதுவரை இந்த ஆரோக்கிய பிரச்சனையால் மூன்று உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
முதல் வழக்கு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட 36 வயதுள்ள ஆண் நோயாளியிடம் அவாஸ்குலர் நெக்ரோசிஸ் பிரச்சனை கண்டறியப்பட்டது. இந்த நோயாளி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது பெற்ற மொத்த ஸ்டெராய்டு 1250 மி.கி ப்ரெட்னிசோலோன் ஆகும். இவருக்கு கோவிட்-19 நோயறிதலுக்கு 67 நாட்களுக்குப் பிறகு, அவருக்கு இடுப்பு அவாஸ்குலர் நெக்ரோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
இரண்டாவது வழக்கு
இரண்டாவதாக 39 வயதுள்ள ஆண் நோயாளியிடம் காணப்பட்டது. இந்த நோயாளிக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது கொடுத்த மொத்த ஸ்டெராய்டுகளின் அளவு 60 மி.கி டெக்ஸாமெதாசோன் மற்றும் 400 மி.கி ப்ரெட்னிசோலோன் மற்றும் 200 மி.கி ஃபாவிபிராவிர் ஆகும். இவருக்கு கோவிட்-19 நோயறிதலுக்கு 57 நாட்களுக்குப் பிறகு இடது இடுப்பு அவஸ்குலர் நெக்ரோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
மூன்றாவது வழக்கு
மூன்றாவதாக 37 வயதுடைய ஆண் நோயாளியிடம் கண்டறியப்பட்டது. இந்த நோயாளி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது பெற்ற ஸ்டெராய்டுகளின் மொத்த டோஸ் 500 மி.கி இன்ட்ரெவனஸ் மெதைல்பிரெட்னிசோலோன் ஆகும். கோவிட்-19 கண்டறியப்பட்ட 55 நாட்களுக்குப் பிறகு அவருக்கு இருதரப்பு அவஸ்குலர் நெக்ரோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனாவுக்கு பிந்தைய புதிய சிக்கல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட 40 வயதிற்கு உட்பட்ட மூன்று நோயாளிகளும் எலும்பில் கடுமையான வலியை சந்தித்த போது, எலும்பு மரண நோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டனர். இந்த மூன்று வழக்குகளும் புதிதாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடையே வந்ததால், இது கவனிக்க வேண்டிய புதிய கொரோனாவுக்கு பிந்தைய சிக்கலாக இருக்கலாம் என்று கூறி மருத்துவர்கள் கவலைப்படுகிறார்கள். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் (BMJ) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையும் அவாஸ்குலர் நெக்ரோசிஸை நீண்ட கோவிட்-இன் அறிகுறியாக எடுத்துக்காட்டுகிறது.
அவாஸ்குலர் நெக்ரோசிஸ் என்றால் என்ன?
எலும்பு திசுக்களின் மரணம் என்று குறிப்பிடப்படும் அவாஸ்குலர் நெக்ரோசிஸ் என்பது எலும்புகளுக்கு இரத்த விநியோகம் இழப்பதன் விளைவாக உருவாகும் ஒரு நோயாகும். பொதுவாக இந்த பிரச்சனை தொடை எலும்பு அல்லது இடுப்பு எலும்புகளில் ஏற்படும். இரத்த விநியோகத்தில் ஏற்படும் இடையூறு எலும்பு திசுக்களை மரணமடைய வைத்து, நெக்ரோசிஸுக்கு வழிவகுக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களிடையே காணப்பட்டது இடுப்பு எலும்பு திசு மரணம் என கண்டறியப்பட்டாலும், இது உடலில் உள்ள எந்த எலும்பிலும் ஏற்படலாம். இந்நோயின் ஆரம்ப கட்டங்கள் பெரும்பாலும் அறிகுறி இல்லாதவை என்றாலும், பாதிக்கப்பட்ட பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்கும் போது அல்லது அதிக செயல்பாட்டில் ஈடுபடும் போது, அது கடுமையான வலி மற்றும் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.
அவஸ்குலர் நெக்ரோசிஸ் என்னும் ஆரோக்கிய பிரச்சனை தீவிரமானால், அதன் விளைவாக எலும்புகள் சரியாக செயல்படாமல் போய், அது மூட்டுகளின் அழிவுக்கு வழிவகுக்கும்.
எலும்பு இறப்புக்கும், கோவிட்-19 - க்கும் என்ன தொடர்பு?
ஏற்கனவே, எலும்பு இறப்பு உட்பட நீண்ட காலத்திற்கு கோவிட்-19 ஏற்படுத்தக்கூடிய பல தாக்கங்களைக் குறித்து நிபுணர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். அப்படி கவனித்து வந்ததில் ஒரு சாத்தியமான காரணியாக இருப்பது ஸ்டெராய்டுகளின் அதிகப்படியான பயன்பாடு ஆகும். ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அதற்கு சிகிச்சை அளிக்க ஸ்டெராய்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவ ரீதியாக, அவாஸ்குலர் நெக்ரோசிஸ் அதிகப்படியான ஸ்டெராய்டுகளை சார்ந்து இருப்பதோடு பிணைக்கப்பட்டுள்ளது. இதற்கான சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், வைரஸால் ஏற்படும் அழற்சியைக் குறைக்கப் பயன்படும் ஸ்டெராய்டுகள், இரத்தத்தில் உள்ள லிப்பிட் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை குறைக்கும் மற்றும் முக்கிய திசுக்கள் மற்றும் உறுப்புக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
ஸ்டெராய்டுகளால் தான் அவாஸ்குலர் நெக்ரோசிஸ் ஏற்படுகிறது என்பதை உறுதிப்படுத்த பல ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகள் தேவைப்படுகின்றன. இருப்பினும், இரண்டாவது அலையின் வேகம் குறைந்து வருவதோடு, தற்போது அவாஸ்குலர் நெக்ரோசிஸ் வழக்கு வெளிவர ஆரம்பித்துள்ளதால், வரும் வாரங்கள் ஒரு முக்கியமானவையாக இருக்கும் என்று மருத்துவர்கள் கவலைப்படுகிறார்கள்.
கொரோனாவில் இருந்து மீள்வதற்கு ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்தினால், ஆபத்து இருக்கிறதா?
கோவிட்-19 சிகிச்சையின் போது ஸ்டெராய்டு பயன்பாடு நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதன் அளவுக்கதிகமான பயன்பாடும் ஊக்குவிக்கப்படுவதில்லை. அதிகப்படியான ஸ்டெராய்டு சார்புடன் பிணைக்கப்பட்டுள்ள ஒரே ஆபத்து அவாஸ்குலர் நெக்ரோசிஸ் அல்ல என்றாலும், கோவிட் உடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஸ்டெராய்டு சிகிச்சையில் ஈடுபடுபவர்களுக்கு மருத்துவர்கள் சில எச்சரிக்கை ஆலோசனைகளை சுட்டிக்காட்டுகின்றனர்.
கோவிட்-19 இலிருந்து மீட்கப்பட்ட நோயாளிக்கு அவாஸ்குலர் நெக்ரோசிஸ் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றாலும், கொரோனாவில் இருந்து மீண்ட பின் இடுப்பு அல்லது தொடை வலியை சந்திப்பவர்கள் உடனே மருத்துவர்களை அணுகி எம்.ஆர்.ஐ எடுத்து சோதித்த அறிவுறுத்தப்படுகிறது.
எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
பெரும்பாலான நிபந்தனைகளைப் போலவே, ஆரம்பகால நோயறிதல் ஒரு நல்ல சிகிச்சையைப் பெற்று குணமாக உதவும். AVN-இன் தற்போதைய வழக்குகள் சரியான நேரத்திட்ல கண்டறியப்பட்டாலும், எலும்பின் நெக்ரோசிஸிற்கான சிகிச்சை திட்டத்தில் பிசியோதெரபி, இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள், ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் போன்றவை வலியில் இருந்து நிவாரணம் அளிக்க பயன்படுத்தப்படுகின்றன. சில சமயங்களில், எலும்பு மற்றும் கோர் டிகம்பரஷனின் சேதமடைந்த உள் அடுக்கை அகற்ற அறுவை சிகிச்சையும் தேவைப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக