Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 8 ஜூலை, 2021

இதை திக்காம... திணறாம... நிறுத்தாம... சொல்லுங்க பார்க்கலாம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
-------------------------------------------------

தளபதி : நம் மன்னரின் கோபம் இன்னும் அடங்கவில்லை!
அமைச்சர் : ஏன், என்ன நேர்ந்தது?
தளபதி : புறமுதுகிட்டு ஓடி வரும்பொழுது மன்னர் கால் இடறி விழுந்துட்டாராம், அவர தாண்டி ஓடுன வீரர்கள் யாரும் அவர கண்டுக்கலையாம்!
அமைச்சர் : 😛😛
-------------------------------------------------

பாபு : அவரு போலி டாக்டர்... இதுக்கு முன்னாடி சர்வரா இருந்துருப்பாருன்னு எப்படி சொல்ற..?
கோபு : சதா வாந்தியா வருதுனு சொன்னா... சாதா வாந்தியா, இல்ல ஸ்பெஷல் வாந்தியான்னு கேட்குறாரே....
பாபு : 😅😅
-------------------------------------------------
 டங்கு ஸ்லிப் ஆகுதா?
-------------------------------------------------
 
சேத்துக்குள்ள சின்னப் புள்ள தத்தித் தத்தி சிக்கிக் கிச்சு.

சித்திரம் வரைகிற சித்திரவேலன சத்திரசுவர்ல சித்திரம் வரைய சொன்னா பையன் சத்திரத்தையே பத்திரம் போட்டு வித்துட்டான்.

கட முட மாட்டு வண்டி தட தட வென உருண்டு போயி மட மட வென கழுன்றதென்றால் பட பட வென நெஞ்சம் பதறாதோ.
-------------------------------------------------
பாலிண்ட்ரோம் சொற்கள்...!!
-------------------------------------------------

↔ மாயமா

↔ மேயுமே

↔ கைரேகை

↔ மாறுமா

↔ மேகமே

↔ தாத்தா

↔ வினவி
-------------------------------------------------
மருத்துவ குறிப்புகள்...!!
-------------------------------------------------
 
👉 வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும், மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

👉 வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது. 

👉 ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக