Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 20 ஜூலை, 2021

சீயக்காய் யூஸ் பண்றவங்க ஹேர் சீரம் பயன்படுத்தலாமா? யாரெல்லாம் எப்படி யூஸ் பண்ணலாம்?

 

ஹேர் சீரம் என்பது தலைமுடி நன்மைகளுக்காக பயன்படுத்தப்படும் ஒரு முக்கியபராமரிப்பு பொருள்.


தலைமுடியை கழுவிய பிறகு முடியை மென்மையாக வைத்திருக்க வெப்பத்திலிருந்து பாதுகாக்க அதை ஸ்டைலிங் செய்ய ஹேர் சீரம் உதவுகிறது. இது தலைமுடியை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் முடிக்கு பிரகாசமாக சேர்க்கவும் ஃப்ரீஸை குறைக்கவும் உதவுகிறது. அதோடு கூந்தலை பலப்படுத்தவும் இந்த ஹேர் சீரம் உதவுகிறது. முடி சீரம் கூந்தலுக்கு அளிக்கும் பயன்கள் மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

​ஹேர் சீரம் என்றால் என்ன?

ஹேர் சீரம் என்பது சிலிகான் அடிப்படையிலான திரவ தயாரிப்பு. இது தலைமுடியின் மேற்பரப்பில் பூசப்படக்கூடியது. ஹேர் ஆயிலை போன்று இல்லாமல் முடி வெட்டுக்காயங்களை ஊடுருவதில்லை. இது முடியின் அமைப்பிலும் மாற்றங்களை உண்டாக்காது. அதற்கு பதிலாக இது சுருள் முடியையும் மென்மையாக மாற்றுகிறது. கூந்தலுக்கு பிரகாசத்தை சேர்க்கிறது

ஹேர் சீரம்ஸில் உள்ள சிலிகான் முடியை வலுப்படுத்த செய்கிறது. இது முடி உதிர்தலை குறைக்கவும் உதவுகிறது. ஏனெனில் முடி சேதத்தை குறைக்க சிலிகான் அடிப்படையிலான சீரம் குறைந்த பி.ஹெச் அளவை கொண்டுள்ளது

ஹேர் சீரம்ஸில் உள்ள செயலில் உள்ள பொருள்கள் மற்றும் அமினோ அமிலங்கள் தலைமுடியில் ஆழமாக ஊடுருவி முடி உடைதலை குறைக்கும். முடி சீரமானது கூந்தலுக்கு சிறந்த உயவு அளிக்க கூடியது என்பதால் முடியை நிர்வகிக்க இவை உதவும்.

​முடிக்கு சீரம் நன்மைகள

ஹேர் சீரம் தலைமுடியை பளபளப்பாக ஆரோக்கியமாகவும் மாற்றி தலைமுடி பிரச்சனையை குறைக்கிறது. சீரம் பயன்படுத்துவதால் தூசி மற்றும் ஈரப்பதத்திலிருந்து தலைமுடியை பாதுகாக்கிறது. இதன் குறைந்த அளவு பி.ஹெச் ஆனது வீக்கத்தை தடுத்து, முடி இழைகளை ஒன்றாக வைத்திருக்கிறது.

ஹேர் சீரம் தொடர்ந்து பயன்படுத்தினால் சூரியனின் புற ஊதாக்கதிர்கள், இரசாயனங்கள், வெப்ப ஸ்டைலிங் கருவிகள் போன்றவற்றிலிருந்து கூந்தலை பாதுகாக்கிறது. மேலும் உலர்ந்த கூந்தல் அல்லது நிறத்திலிருந்து சேதமடைந்த முடியை ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

​சீரம் தேர்வு செய்யும் முறை

முடி வளர்ச்சிக்கு சரியான தயாரிப்பு கண்டுபிடிப்பதில் தான் உங்கள் முடி வளர்ச்சி அடங்கியுள்ளது. ஆரோக்கியமான சீரம் உள்ளவர்கள் சீரம் பயன்படுத்த கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் இவர்களும் கூந்தலின் ஆரோக்கியத்தை தக்க வைத்துகொள்ள சீரம் பயன்படுத்தலாம்.

அடிக்கடி முடியை ஸ்டைலிங் செய்பவர்கள், கர்லிங் அல்லது ஸ்டைலிங் கருவி அதிகம் பயன்படுத்துபவர்கள் வெப்ப சேதத்திலிருந்து எதிராக செயல்படுவதை தவிர்க்க சீரம் பயன்படுத்துவது உண்டு.

தலைமுடி சேதமாக கொண்டிருந்தால் உங்களுக்கு கெரட்டின் கொண்ட முடி சீரம் மூலப்பொருளாக தேர்ந்தெடுக்கலாம். இது முடிக்கு புரதம் அளிக்க உதவும்.மந்தமாகவும் வறண்டதன்மையாகவும் இருந்தால் நாள் முழுவதும் கூந்தலில் ஹேர் சீரம் பயன்படுத்தலாம்.

​ஹேர் சீரம் பயன்படுத்தும் போது

சீரம் பயன்படுத்தும் முறையிலும் அதன் நன்மைகள் அடங்கியுள்ளது. தலைமுடியை நன்றாக அலசிய பிறகு பயன்படுத்த வேண்டும். ஷாம்பு போட்டவர்கள் தான் ஹேர் சீரம் பயன்படுத்த வேண்டும். சீயக்காய் பயன்படுத்தும் போது இதை தவிர்ப்பதே நல்லது.

ஹேர்ஸ்ப்ரேக்களை போல் இல்லாமல் ஹேர் சீரம் தலைமுடிக்கு ஊட்டச்சத்துக்கான ஆதாரமாக உள்ளது. அதனால் இதை கூந்தலை அலசாமல் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்துவதால் இது எந்த பலனையும் அளிக்கது. ஷாம்பு, கண்டிஷனர் பிறகு சீரம் போன்றவையே முழுமையான பலன் தரக்கூடும்.

​ஹேர் சீரம் எப்படி பயன்படுத்துவது

ஹேர் சீரம் பயன்படுத்துவது முடியின் நீளம் மற்றும் அடர்த்தியை பொறுத்தது. சீரம் இரண்டு முத ஆறு சொட்டுகள் வரை எடுத்து உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்க்கவும். தலைக்குளியலுக்கு பிறகு தலைமுடி உலர்ந்துள்ளதா அல்லது ஈரமாகவே இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

கூந்தலை முன்நோக்கி புரட்டி கூந்தலில் சீரம் தலைமுடியின் நுனியிலிருந்து மேல்நோக்கி செல்லுங்கள். பிளவு முனைகளில் முடி சீரம் நன்றாக வேலை செய்யும். முடியை மீண்டும் புரட்டி சீரம் இரண்டு முத நான்கு துளிகள் எடுத்து மசாஜ் செய்யவும்.

பின்புறத்தில் இருந்து முடியின் முன் நோக்கி தேய்க்கவும். இன்னும் சில சொட்டுகள் எடுத்து சீரம் முழுவதும் தலையில் படும்படி பயன்படுத்த வேண்டும். முடி சீரமானது சற்று ஈரமான கூந்தலில் பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.

​ஹேர் சீரம் பராமரிப்புக்கு பிறகு

ஹேர் சீரம் பயன்படுத்திய பிறகு உலர்த்துவது முற்றிலும் அவசியம். ஹேர் சீரம் தலைமுடி முழுமையும் சீராக தடவினால் தலைமுடி சிக்கலில்லாமல் பிரிக்க உதவும்.

தலைமுடி முற்றிலும் உலரும் வரை வைத்து விடவும். ஹேர் ஸ்ட்ரைட்டனரை அடிக்கடி பயன்படுத்தினால் அதற்கு பிறகு சீரம் பயன்படுத்துவது நல்லது. கூந்தலில் இருக்கும் சிக்கல்களை நீக்க தலைமுடியை மெதுவாக பிரித்து சிக்கெடுங்கள். கவனமாக பயன்படுத்தினால் சீரம் கூந்தலுக்கு பலவிதமான நன்மைகளை செய்யும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக