
ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனமும் தனித்தவமான அம்சங்களை கொண்டுவருவதால் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரியல்மியின் துணை பிராண்டு டிசோ இந்தியாவில் புதிய பீச்சர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
அண்மையில் இந்த புதிய சாதனத்தின் டீசர் வெளியானது. குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் இந்த பீச்சர் போன் மாடல் வெளிவரும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த சாதனத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதேபோல்
இந்த பீச்சர் போன் ஸ்டார் 5 என்று அழைக்கப்படும். பின்பு இந்த சாதனத்தின்
ஒரு சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. மேலும் ஸ்டார் சீரிசில் குறைந்த
விலை மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று
டிசோ சார்பில்
கூறப்பட்டுள்ளது. மேலும் டிசோ ஸ்டார் 5 சாதனம் ஆனது டூயல் சிம் வசதி, 2ஜி
கனெக்டிவிட்டி, மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 1830 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட
பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக