Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 9 ஜூலை, 2021

தூக்கிப்போட வேண்டிய நான்கு விஷயங்கள்... அட அப்படியா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------
மகன் : பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..
அப்பா : என்னடா சொல்ற?
மகன் : பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா வீட்டுபாடம் செய்து தர்றீங்க. வாத்தியார் என்னை அடிக்கிறாரு.
அப்பா : 😜😜
-------------------------------------
பாபு : எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?
கோபு : இப்பதான் டைனோஸரே கிடையாதே... 
பாபு : எப்படி இருக்கும்? நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரையெல்லாம் சுட்டுட்டாருன்னு!
கோபு : 😏😏
-------------------------------------
நான்கு விஷயங்களை தூக்கிப்போடு!
-------------------------------------
👉 துக்கம்

👉 கவலை

👉 இயலாமை

👉 கஞ்சத்தனம்
-------------------------------------
குறளும்... பொருளும்...!!
-------------------------------------
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
-------------------------------------
பொருள் :
-------------------------------------
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக