பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தற்போது தங்களது போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் இலவச ஈராஸ் சலுகைகளை வழங்குகிறது. இந்த நன்மையானது மொத்தம் ஆறு திட்டங்களில் கிடைக்கிறது. இந்த திட்டங்களின் விலை ரூ.199, ரூ.399, ரூ.525, ரூ.798, ரூ.999 மற்றும் ரூ.1525 ஆகும். இந்த திட்டங்கள் ஈராஸ் நவ் சேவைக்கான இலவச அணுகலை வழங்குகிறது. இது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஈராஸ் நவ் சலுகை
குடும்ப இணைப்புகள் திட்டம், சிறப்பு தள்ளுபடி திட்டங்கள் மற்றும் நிறுவன வணிக வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச அணுகல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் இந்த வாடிக்கையாளர்களுக்கு ரூ.20 கூடுதல் திட்டத்தின் மூலம் ஈராஸ் நவ் சந்தா கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடவும் போஸ்ட்பெய்ட் பிரிவில் அதிக சந்தாதாரர்களை இணைக்கவும் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகளை வழங்குகிறது. இது 300 நிமிட ஆஃப் நெட் அழைப்புகளையும் வழங்குகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு 25 ஜிபி டேட்டா மற்றும் 75 ஜிபி ரோல்ஓவர் நன்மையையும் வழங்குகிறது. 25 ஜிபி தரவு முடிந்தவுடன் 1 ஜிபிக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.399 திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச உள்ளூர் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்பு நன்மைகளுடன் 100 எஸ்எம்எஸ் மற்றும் 30ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.
ரூ.798 ரீசார்ஜ் திட்டம்
ரூ.798 ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு சலுகைகளை வழங்குகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகைகளையும் வழங்குகிறது. அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ்-கள், 50 ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியோடு வருகிறது. இந்த திட்டத்துடன் 2ஜிபி வரை குடும்ப இணைப்புகளையும் வழங்குகிறது. ரூ.999 ரீசார்ஜ் திட்டத்தில் 75ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு சலுகைகளை வழங்குகிறது. மேலும் 3 குடும்ப இணைப்பு நன்மைகளை வழங்குகின்றன.
ரூ.1525 ரீசார்ஜ் திட்டம்
ரூ.1525 ரீசார்ஜ் திட்டமானது பிஎஸ்என்எல்-ன் மிகவும் விலையுயர்ந்த திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இந்த போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம் என்னவென்றால் இதில் தரவு கட்டுப்பாடு இல்லை என்பதாகும். இந்த திட்டம் வரம்பற்ற தரவு நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் 100 இலவச எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்கிறது.
ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த திட்டம் பயனர்களுக்கு 100 ஜிபி டேட்டாவை எந்த வரம்பும் இல்லாமல் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் பயன்பாட்டிற்கான 60 நாட்கள் சந்தா கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.
பிஎஸ்என்எல் ரூ.75 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.75 திட்டம் ஆனது பயனர்களுக்கு மொத்தமாக 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் 100 நிமிடங்கள் வரை பேசலாம். பின்பு வரம்பை எட்டிய பிறகு நிமிடத்திற்கு 30 பைசா கட்டணம்
வசூலிக்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக