
ஆதார் அட்டை என்பது இந்தியாவில் அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய ஆவணமாகும். ஆதார் அட்டை எளிதில் சரிபார்க்கக்கூடிய 12 இலக்க தனித்துவ எண்களைக் கொண்டுள்ளது, இது நாட்டில் அடையாளச் சான்றாகச் செயல்படுகிறது. புதிய சிம் எண் வாங்குவது முதல், வங்கி வேலை, அரசாங்க சலுகைகளைப் பெறுவது போன்ற அனைத்து விதமான உத்தியோக பூர்வ வேலைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கியமான ஆதார் சேவையின் கீழ் வழங்கப்பட்டு வந்த இரண்டு சேவைகளை UIDAI இப்போது இடைநிறுத்தம் செய்துள்ளது.
ஆதார் அட்டை தொடர்பான 'இந்த' இரண்டு சேவைகள் இனி கிடையாதா?
ஆதார் அட்டை தொடர்பான இந்த இரண்டு சேவைகளை யுஐடிஏஐ இடைநிறுத்தம் செய்வதாக தற்பொழுது அறிவித்துள்ளது. UIDAI அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி, தற்பொழுது என்ன-என்ன சேவைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கிடைக்காமல் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். முடக்கம் செய்யப்பட்ட இந்த இரண்டு ஆதார் அட்டை சேவைகளால் பொதுமக்களுக்கு என்ன சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
ஆதார் அட்டையில் உள்ள முகவரியை இனி இப்படி மாற்றம் செய்ய முடியாது
Unique Identification Authority of India (UIDAI) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சரிபார்ப்பு கடிதம் மூலம் ஆதார் அட்டையில் முகவரிகளைப் புதுப்பிக்கும் வசதியை யுஐடிஏஐ நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. UIDAI வழங்கிய தகவல்களின்படி, மேலதிக உத்தரவுகள் வரும் வரை முகவரி சரிபார்ப்பு கடிதத்தின் மூலம் முகவரியை புதுப்பிக்கும் வசதி நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாற்காலிகமாக மக்கள் அவர்களின் முகவரி புதுப்பிக்கும் வசதியை தற்போது பயன்படுத்த முடியாது.
இதனால் பொதுமக்களில் யாருக்கெல்லாம் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது?
இதனால் என்ன சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை இப்போது பார்க்கலாம். முன்னர் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் பிற ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இந்த வசதியின் மூலம் தான் அவர்களின் முகவரியை அவ்வப்போது புதுப்பித்துப் பயன்படுத்த முடிந்தது. ஆனால், இனி அந்த மாதிரியான காரியங்களை இவர்களால் செய்ய முடியாது. அப்படியானால், இவர்கள் முகவரியைப் புதுப்பிக்க வேறு வழியே இல்லையா? என்று கேட்டால் அதற்கு ஒரு வழி உள்ளது என்பது தான் பதில். அதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும்?
இனி இந்த முறையை பின்பற்றி தான் முகவரியை மாற்றம் செய்ய முடியும்
தற்போது முகவரி சரிபார்ப்பு கடிதம் தொடர்பான விருப்பத்தை UIDAI தனது வலைத்தளத்திலிருந்து நீக்கி உள்ளதினால், இனி ஆதார் பயனர்கள் முகவரியைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டைக்கான UIDAI வலைப்பக்கத்தில் பட்டியலிடப்பட்ட ஆவண ஆதாரத்தை சமர்ப்பிப்பதன் மூலம் முகவரியைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என்றும் UIDAI தெரிவித்துள்ளது. எந்த ஆவணங்கள் இதற்குச் செல்லுபடியாகும் என்பதையும் ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ளது.
எந்தந்த ஆவணங்களைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்?
இனி முகவரியைப் புதுப்பிக்க விரும்பும் பொதுமக்கள் எந்த-எந்த ஆவணங்களைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளலாம். முகவரியை புதுப்பிக்கத் தேவையான ஆவணங்கள் பற்றி அறிந்துகொள்ளவும், எந்த ஆவணங்கள் எல்லாம் செல்லுபடியாகும் என்பதைத் தெரிந்துகொள்ள இந்த https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf லிங்க்-ஐ கிளிக் செய்துகொள்ளுங்கள். இந்த PDF பைலை பதிவிறக்கம் செய்து உள்ளே உள்ள ஆவணங்களின் பட்டியலை பார்வையிடுங்கள்.
இந்த சேவையும் இனி கிடையாது UIDAI திடீர் அறிவிப்பு
UIDAI இன் இந்த திடீர் அறிவிப்பு, முகவரியை மாற்ற வேறு எந்த ஆவணங்களும் இல்லாத நபர்களைப் பாதிக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்களுக்கான தீர்வு என்ன என்பதை UIDAI விளக்கமளிக்கவில்லை. அதேபோல், UIDAI இடைநிறுத்தப்பட்ட மற்றொரு சேவை பழைய அட்டையின் மறுபதிப்பு (Aadhaar Card Reprint) ஆகும். முந்தைய அட்டைதாரர்கள் அசல் அட்டையை இழந்தால் பழைய ஆதார் அட்டையை மீண்டும் அச்சிட அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த சேவையையும் UIDAI நிறுத்தி வைத்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புது அட்டைக்கு இனி இதை தான் செய்ய வேண்டும்
அப்படியானால், ஆதார் அட்டை இல்லாதவர்கள் புதிய அட்டைகளை வாங்க முடியாதா என்று தவறாக நினைக்க வேண்டாம். பழைய பாணியிலான ஆதார் அட்டை பிரின்டிங் சேவை மட்டுமே தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழக்கம் போல் ஆன்லைனில் பி.வி.சி ஆதார் அட்டைகளை ஆர்டர் செய்யலாம் என்பதைக் கவனிக்க மறக்காதீர்கள். அதேபோல், மக்கள் இ-ஆதார் அட்டையை பிரண்ட் செய்து, காகித வடிவில் அதை ஆவணமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று UIDAI அறிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக