Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 8 ஜூலை, 2021

உங்களுடைய ஆவணங்களை வைத்து பெறப்பட்ட சிம் கார்டு எத்தனை இருக்கிறது? இதோ சரிபார்க்க ஒரு வலைத்தளம்.!

லைத்தளத்தில் வெளிவந்தடெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான சலுகைகளை வழங்கி வருகிறது. எனவே நாட்டில் அதிக மக்கள் இந்த ஜியோ சிம் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மேலும் இப்போது உங்களுடைய பெயரில் எத்தனை சிம் கார்டு இருக்கிறது? பின்பு உங்களுடைய பெயரில் எத்தனை சிம் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது அல்லது உங்களுடைய ஆதார் அல்லது முக்கியமான ஆவணங்களை வைத்து பெறப்பட்ட சிம் கார்டு விவரங்களை தெரிந்து கொள்ள ஒரு வழி உள்ளது.

அதாவது சமீபத்தில் தொலைத்தொடர்பு துறை ஒரு புதிய போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்களை தங்கள் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்ட அனைத்து தொலைபேசி எண்களையும் சரிபார்க்க உதவுகிறது. அந்த தொலைத்தொடர்புவலைத்தளம் https://tafcop.dgtelecom.gov.in/ இதுதான்.

இந்த வலைத்தளத்தில் நமது பெயரில் எத்தனை சிம் கார்டு பெறப்பட்டுள்ளது என்பதை எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். இதுதவிர நமது ஆவணங்களை வைத்து மற்றவர்கள் சிம் கார்டை வாங்கி இருந்தாலும் அல்லது நாம் தவறவிட்ட சிம் கார்டு இருந்தாலும், அதை நீக்குவதற்கு இந்த வலைத்தளத்தில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் இந்த வலைத்தளத்தில் நமது பெயரில் எத்தனை சிம்
கார்டு பெறப்பட்டுள்ளது என்பதை பார்க்க சில வழிமுறைகள் உள்ளது. அதை விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1

முதலில் https://tafcop.dgtelecom.gov.in/ வலைத்தளத்தில் உள்நுழைய வேண்டும்.

 
வழிமுறை-2

அடுத்து நீங்கள் பயன்படுத்தக்கூடிய செல்போன் எண்ணை அந்த வலைத்தளத்தில் உள்ளிடவும். பின்பு உங்களுக்கு ஒருஓடிபி கிடைக்கும் அதை இந்த தளத்தில் பதிவிட வேண்டும்.

வழிமுறை-3

அதன்பின்னர் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அனைத்து எண்களும் அந்த வலைத்தளத்தில் காண்பிக்கப்படும். குறிப்பாக உங்களுடைய ஆதார் எண்ணை வைத்து எத்தனை சிம் வாங்கியிருந்தாலும் அப்படியே இந்த வலைத்தளத்தில் காண்பிக்கப்படும்.

வழிமுறை-4

இந்த வலைத்தளத்தில் நீங்கள் பயன்படுத்தாத சிம் கார்டு இருந்தால், அதை not required என்பதை கிளிக் செய்தால் போதும் எளிமையாக நீக்கிவிடலாம்.

வழிமுறை-5

குறிப்பாக இந்த தளத்தில் உள்ள அனைத்து சிம் கார்டும் உங்கள் பெயர் மற்றும் ஆவணங்களை கொடுத்து வாங்கப்பட்டது. ஒருவேளை உங்களுக்கு தெரியாமல், உங்களது பெயரில் யாராவது சிம் பயன்படுத்தி வந்தால், அதை எளிமையாக நீக்க முடியும். அதற்கு அந்த தளத்தில் உள்ள This is not my number என்பதை கிளிக் செய்தால் போதும்.

கவனிக்க வேண்டிய விஷயம்: DoT வழிகாட்டுதல்களின்படி, ஒருவரின் id proof வைத்து ஒன்பது சிம் கார்டுகள் வரை மட்டுமே பெற முடியும். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தாத சீம் கார்டு இருந்தால், இந்த தளத்தில் நீக்கிவிட்டு புதிய சிம் கார்டு கூட வாங்க முடியும்.

அதேபோல் indiatoday வலைத்தளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த வலைத்தளம் ஒரு சில இடங்களில் மட்டுமேசெயல்படும் வகையில் உள்ளது. விரைவில் அனைத்து இடங்களிலும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக